கீரை கொள்ளு பொரியல்

தேதி: January 26, 2009

பரிமாறும் அளவு: 2 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கொள்ளு -- ஒரு கைப்பிடி (உப்பு சேர்த்து வேகவைத்தது)
கீரை -- 1 கட்டு (ஆய்ந்து, நறுக்கிக் கொள்ளவும்)
சின்ன வெங்காயம் -- 10 என்னம்
பச்சைமிளகாய் -- 2 என்னம்
தேங்காய் துருவல் -- 2 ஸ்பூன்
சீரகம் -- 1 டீஸ்பூன்
தாளிக்க :
கடுகு, உளுந்து -- 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை -- 1 இனுக்கு


 

கீரை ஏதாவது ஒரு பொரியல் கீரையை அல்லது எல்லா கீரையையும் பயன்படுத்தலம்.

வாணலியில் தாளிக்க எண்ணைய் ஊற்றி கடுகு,உளுந்து தாளித்து சீரகம்,கறிவேப்பிலை போடவும்.
பின் வட்டமாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு ஒரு வதக்கு வதக்கி ஆய்ந்து நறுக்கிய கீரையை போட்டு வதக்கி ஒரு கையளவு தண்ணீர் தெளித்து வேகவைக்கவும்.
கீரை வெந்தபின் நன்கு கிளறி வேகவைத்த கொள்ளு தண்ணீரில்லாமல் சேர்த்து துருவிய தேங்காயையும் போட்டு உப்பு தேவை எனில் சேர்க்கவும்.
சுவையான சத்தான கீரை கொள்ளு பொரியல் தயார்.


மேலும் சில குறிப்புகள்


Comments

அன்பு சகோதரி சுபா ஜெயபிரகாஷ்,

இன்று மதியம் கொள்ளு, கீரை தான் மிகவும் நன்றாக இருந்த்து. நன்றி

அன்பு சகோதரன்.

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

மிகவும் நன்றி சகோதரரே...
மற்ற குறிப்புகளும் நேரம் கிடைக்கும் போது செய்து அசத்துங்கள்..

சுபா நலமாக இருக்கிறீர்களா? முதல் தடவையாக உங்களுடன் பேசுகிறேன். உங்கள் கீரை கொள்ளுப் பொரியல் செய்தேன். மிகவும் சுவையாக இருந்தது. உங்கள் குறிப்பிற்கு மிக்க நன்றி.

நன்றி,
"அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது"