என் மகனுக்கு உதவவும் help please

என் மகனுக்கு இரண்டு நாட்கள் ஆக vomit பண்ணி கொண்டு இருக்கிரான் doctorridam
காட்டினோம் stomach upset என்று சொன்னார்கள் பால், தயிர் கொடுக்க வேண்டாம் என்றும் & சாப்பாடு கொடுக்க வேண்டாம் என்றும் சூப் மட்டும்
கொடுக்க சொன்னார்கள் என்ன சூப் கொடுக்கலாம் வெஜ் சூப் கொடுத்தென்
பண்ணி விட்டான் lose motion போய்க்கிறான்

வருத்தப் படாதீர்கள். இதற்கு ஜுஸ், சூப் எனக் கொடுத்து தான் சரி செய்ய முடியும். 4 -7 நாள் ஆகும் சரியாக. Antibiotic ethuvum illai. so don't worry. he will be ok very soon.

க்ளியர் சூப் கொடுக்கலாம், சிக்கன் வெஜிடபுள் சூப். ஆப்பிள் ஜூஸ், க்ரேப் ஜூஸ் ,பீடியாலைட் போன்றவை கொடுக்கலாம்.டீஹைட்ரேட் ஆகாம பாத்துக்கோங்க.இந்த சீசனில் நிறைய குழந்தைகளுக்கு வந்து விட்டது.

என் மகனுக்கு இதே மாதிரி இருந்து எங்கள் Peadiatrician காட்டிய போது அவர் சொன்னார் babylyte என்ற waterஐ பத்து நிமிடத்துக்கு ஒரு தரம் 10ml கொடுக்க சொன்னார். அப்படியே கொடுத்து வர சரியாகி விட்டது. நீங்கள் doctorஐ பார்த்தீர்களா? மருந்து கொடுத்தாரா?

டேங்க் ஜூஸில் உப்பு சர்க்கரை கலந்து கொடுங்கள்
குளுக்கோஸ் இருந்தாலும் அதில் உப்பு சர்கக்ரை போட்டு கொடுக்கலாம்.
தண்ணீர் ஆகாரம் நிறைய கொடுக்கனும்.
ஜலீலா

Jaleelakamal

சரியாகிவிடும்..எப்படியும் 1 வாரம் ஆகும்..எக்காரணம் கொண்டும் பால் ஒரு சொட்டு கூட கொடுக்காதீங்க..
சாதம் வடிச்ச கஞ்சி தண்ணி போல கரைச்சு கொடுக்கலாம்
இளநீர் கொடுக்கலாம்,க்லூகோஸ் கொடுக்கலாம்..நாக்கில் 1 நாளுக்கு மூன்று முறை தேனை தடவி விடுங்கள் ..வாந்தி,டயோரியா கட்டுப்படும்.
வெறும் வர ப்ரெட்,பன்னும் சாப்பிடலாம்..பிஸ்கட்டில் ஆரோ ரூட் பிஸ்கட் கொடுக்கலாம்.
மருந்து கடையில் எலெக்ட்ரொலைட் பொடி வாங்கி கரைத்து கொடுத்துகிடே இருங்க..
வாயில் எச்சில் வழுவழுவென திக்காவது போலோ கண்ணில் தண்ணீரில்லாமல் வரண்டு வருவது போலோ skin வெளர்த்து(pale) வந்தாலோ மருத்துவரிடம் கொண்டு செல்லுங்கள்.
நல்ல 15 நிமிடம் கொதிக்கவைத்த்ய் ஆறிய தண்ணீர் அடிக்கடி பருக கொடுங்க.

என்னுடைய சந்தெகத்திற்கு பதில் அளித்த அனைத்து தொலிகளுக்கும் நன்றி now he is fine இப்பொது அவன் நன்றாக இருக்கிறான் சப்பாடு ஏதும் சாப்பிட வில்லை juice மட்டும் குடிக்கிறான் சப்பிட்டால் உடன் vomit பண்ணுகிறான் என்ன செய்யாலாம்

அன்புத்தோழி,
சில குழந்தைகள் , சாப்பிட பிடிக்காமல் சாப்பிடும்போது வாமிட் பண்ணும். அதற்கு,
சாப்பிடுவதே அவர்களுக்கு தெரியாதமாதிரி, அவர்கள் கவனத்தை வேறு பக்கம் திருப்பி, சாப்பிட வைக்கணும்.
உங்க மகனுக்கு என்ன வயதென்று தெரியலை. என்ன வயதாக இருந்தாலும் சரி, பையனுக்கு பிடித்த விஷயங்களினை பற்றி சாப்பிட்டு முடிக்கும்வரை பேசிக்கொண்டு இருங்கள்.
சின்ன பையனாக இருந்தால், கதை, அவன் நண்பர்கள்,ஸ்கூல்,கார்ட்டூன் என்றெல்லாம் கவனத்தினை திசை திருப்பவிட்டு சாப்பிட வைக்கவும்.
சாப்பிட்ட உடனேயே, காற்றோட்டமான இடத்தில் சிறிது மெதுவாக நடக்க வையுங்கள்.

இப்போ தான் வாமிட் நின்னு இருக்கு இல்லயா, அதனால் இன்னும் பால், தயிர் மற்ற பால் பொருள்கள் எதையும் கொடுக்க வேண்டாம். ரசம் சாதம், மசித்த உறுளை கிழங்கு, ப்ரெட் டோஸ்ட் , ஜெல்லி , க்ராக்கர், போன்றவை கொடுக்கலாம். கொஞ்சம் கொஞ்சமாக கொடுக்கலாம்.

மேலும் சில பதிவுகள்