பொன்மொழிகளை பேசுவோம் வாருங்கள் பாகம்.....1

வாருங்கள் தோழிகளே நாம் அனைவருக்கும் தெரிந்த நல்ல பொன்மொழிகளை பேசுவோம் வாருங்கள் பாகம்.....1

நல்ல வாக்கியங்களை நாம் பேசுவோம் இது அனைவருக்கும் பயன் உள்ள்தாக் இருக்கும்.
இதற்கான முதல் படியாக ஓரு இழையை தொடங்குவோம் தோழி நாம் அன்னைவருக்கும் தெரிந்த நல்ல விஷயங்கள்,ததுவங்கள்,பொன்மொழிகள
்,திருக்குற்ள் அனைத்தும் பேசுவோம்.

முதல் பொன்மொழி

1.நல்லதே நினையுங்கள் நல்லதே நடக்கும்

2.துணிந்தவனுக்கு வாழ்க்கை ஓரு கரும்பு. பயந்தவனுக்கு வாழ்க்கை ஓரு வளைக்க முடியாத இரும்பு.

அன்புதோழி
ஜெயலக்ஷ்மிசுதர்சன்

உன்மைதான் ஜெயாக்கா.உங்களின் பொன் மொழிகள் சூப்பர்.

1.யாரும் தான்தோன்றியல்ல. நம்மை ஆக்கியவர்கள் ஆயிரம்பேர், ஒவ்வொருவரும் நமக்கு ஒரு நல்ல காரியம் செய்திருக்கிறார்கள். உற்சாக வார்த்தை சொல்லியிருக்கிறார்கள். குணத்திலும், எண்ணத்திலும், வெற்றியிலும் உதவியிருக்கிறார்கள்.

நன்றி சித்தி.

அன்பை விதைத்தவன் நல்ல பண்பை அறுவைடைச் செய்வான்.

அன்பை விதைத்தவன் நல்ல பண்பை அறுவைடைச் செய்வான்.

படித்தவர் எல்லாம் புத்திசாலியுமில்லை
படிக்காதவர் எல்லாம் முட்டாளுமில்லை
கோபம் அறிவுக்கு சத்ரு
பொருமை ஆக்கத்திற்க்கு துணை

எனக்கு பிடித்த பொன் மொழிகள்.

1. எல்லாம் நன்மைக்கே....

2. தன்னைச் சிதைக்கும் கோடாரிக்கும் வாசனைதான் கொடுக்கும் சந்தன மரம்.

3. ஒருவர் சகிப்புத் தன்மையேடு வாழ்ந்தால் அவர் எல்லா நல்ல வழியையும் கற்றுக் கோள்வார்.

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

1.என்னால் முடியும் என்பது தன்னம்பிக்கை,என்னால் மட்டும் முடியும் என்பது தலைக்கனம்..
2.மனமகிழ்வுடனும் முழு ஈடுபாட்டுடனும் செய்யப்படும் வேலை ஒரு அழகான அனுபவம்.
3.பள்ளியில் பாடத்தை கற்றுக்கொண்டபின் பரீட்சை எழுதுகிறோம். ஆனால் வாழ்க்கையிலோ பரீட்சையின் பின்தான் பாடம் படிக்கிறோம்.

தாஜ், சந்தோ, பிரபா ரொம்ப நல்லா இருக்கு ப்பா உங்கள் பொன்மொழிகள். இன்னும் இதுப்போல் பல நல்ல மொழிகளை கூறுங்கள். நன்றீ

இன்றைய பொன் மொழி...

1.பசிக்கு சாப்பிடுபவன் சுகவாசி
ருசிக்கு சாப்பிடுபவன் நோயாளி.

2.தேர்வை நெருங்க விடாதே
தேர்வினை நீ நெருங்கு.

செயல்கள் அனைத்தும் எண்ணங்களை கொண்டே நிர்ணயம் செய்ய படுகிறது ஒவ்வொருவரும் அவரவர் எண்ணத்தின் பலனயே அடைவர்

நீ இறைவனை பார்க்காவிடினும் அவன் உன்னை பார்க்கிறான் என்பதை மனதில் கொள்

மேலும் சில பதிவுகள்