கத்திரிக்காய் சட்னி

தேதி: January 27, 2009

பரிமாறும் அளவு: 5 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

2
Average: 2 (3 votes)

 

கத்தரிக்காய் - 300 கிராம்
காய்ந்த மிளகாய் - 5
சீரகம் - 2 தேக்கரண்டி
புளி - எலுமிச்சை அளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 தேக்கரண்டி


 

கத்தரிக்காயை பெரிய துண்டுகளாக வெட்டிப் பொரிக்கவும்.
காய்ந்த மிளகாயை சாடையாக வறுத்து அருவல் நொருவலாக அரைக்கவும்.
புளியைக் கரைத்து வைக்கவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு சீரகத்தைப் போட்டு பொரிக்கவும்.
அதற்குள் கரைத்த புளியை ஊற்றி கொதிக்க விடவும்.
பின்பு இறக்கி ஆறவிடவும்.
கிரைண்டரில் பொரித்த கத்தரிக்காய், மிளகாய், உப்பு, கொதித்த புளிக்கரைசல் சேர்த்து அடிக்கவும்.
பின்பு சோறு, புட்டு, தோசை, இடியப்பத்திற்கு பரிமாறவும்.


2 அல்லது 3 நாட்கள் வைத்து சாப்பிடலாம்.

மேலும் சில குறிப்புகள்