ஒரிஜினல் மசால் வடை

தேதி: January 27, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பட்டாணிப்பருப்பு - 1/4 கிலோ
சின்ன வெங்காயம் - 150 கிராம்
பச்சைமிளகாய் - 3
கறிவேப்பிலை - சிறிது
மல்லித்தழை - சிறிது
பட்டை - 1 சிறிய துண்டு
சீரகம் - 1/2 டீஸ்பூன்
மிளகு - 1/4 டீஸ்பூன்
சோம்பு - 1/4 டீஸ்பூன்
பூண்டு - 5 பற்கள்
இஞ்சி - 1 துண்டு
மிளகாய்வற்றல் - 6
உப்பு - சுவைக்கு
எண்ணெய் - பொரிக்கத்தேவையான அளவு


 

வடை சுடுவதற்கு 1 மணி நேரம் முன் பருப்பை ஊறப்போடவும்.
1 மணி நேரம் ஊறிய பருப்பை வடிதட்டில் கொட்டவும்.
நன்கு நீர் வடிந்திருக்க வேண்டும். சற்று உலர்ந்த தன்மை வரும் வரை வடிதட்டில் போடவும்.
வெங்காயம், பச்சைமிளகாய், மல்லி, கறிவேப்பிலை அனைத்தையும் பொடியாக நறுக்கவும்.
பட்டை, சீரகம், மிளகு, சோம்பு, பூண்டு, இஞ்சி, மிளகாய்வற்றல், உப்பு அனைத்தையும் மிக்ஸியில் பொடிக்கவும்.
இதனை நறுக்கி வைத்த வெங்காயத்தில் நன்கு பிசைந்து கொள்ளவும்.
பட்டாணிப்பருப்பை மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்து அனைத்தையும் நன்கு கலந்து வடைகளாக தட்டி எண்ணெயில் மொறு மொறுப்பாக பொரிக்கவும்.


மசால் வடை என்றதும் கடலைப்பருப்பில் தான் செய்வார்கள் என்போம். ஆனால் பட்டாணிப்பருப்பில் தான் வடையின் சுவையே உள்ளது. ஒரு முறை இந்த முறையில் வடை செய்து பாருங்கள். மறக்கவே மாட்டீர்கள்.
இந்த முறையில் வடை செய்தால் நன்கு மொறுமொறுப்பாக, சுவையாக இருக்கும். நீண்ட நேரம் இருந்தாலும் வடையின் மொறுமொறுப்புத் தன்மை குறையாது

மேலும் சில குறிப்புகள்


Comments

i cooked masalvadai .............very taste sister

thank u

பொறூமை இருந்தால் எதையிம் சாதித்து விடலாம்

நான் எப்பொழுதும் பட்டாணிபருப்பில்தான் வடை செய்வேன்.இதன் சுவையே தனி.
செல்வி.

சவுதி செல்வி

எங்கள் ஊரிலும் பட்டாணி பருப்பில் தான் செய்வார்கள். இதை 'வடை பருப்பு' என்றே சொல்லுவோம்.

ஆம் கவின்.இதனை எங்கள் ஊரிலும் சிலர் வடை பருப்பு என்பார்கள்.கடலைப்பருப்பை விட சைசில் சற்று பெரியதாக இருக்கும்.விலையும் கடலைப்பருப்பை விட மலிவு.பின்னூட்டத்திற்கு நன்றி.
ஸாதிகா

arusuvai is a wonderful website

பட்டாணி பருப்பு என்றால பச்சை பட்டாணியா?

அப்போ பட்டாணி பருப்பு என்பது வடைபருப்பா(பெரிய கடலை பருபு) அல்லது காய்ந்த பட்டாணி கடலையா?
ஷாதிகா ஆண்டி சொல்லுங்கோ எங்க வீட்டில் வடை பருப்பில் தான் செய்வார்கள் இல்லை பட்டாணி பருப்பில் தான் செய்ய வேண்டுமா..நல்ல கவர்ச்சியா குறிப்பை கொடுத்திருக்கிறீர்கள்..வாழ்த்துக்கள்.

தளிகா,மேலே குறிப்பிட்டுள்ள மாதிரித்தான் பட்டாணிபருப்பு இருக்கும்.சிலர் அதை வடை பருப்பு என்பார்கள்.பட்டாணி பருப்பு நீங்கள் சொல்வது போல் பெரிய சைஸ் கடலைபருப்பு போல்தான் இருக்கும்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

கீதா,பட்டாணிபருப்பு என்றால் பச்சை பட்டாணி அல்ல.கடலைபருப்பு போலவே அதைவிட சைசில் சற்று பெரியதாக இருக்கும்.கடலைப்பருப்பு விற்கும் எல்லா கடைகளிலும் இந்த பருப்பு கிடைக்காது.
ஸாதிகா

arusuvai is a wonderful website

செல்வி,உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.பட்டாணிப்பருப்பில்,மேற்கூறிய முறையில் செய்து பாருங்கள்.பருப்பை ஊற வைப்பதில் இருந்து,அது உலர்ந்த தன்மைக்கு வந்த பிறகு கரகரப்பாக அரைப்பதில் தான் வடையின் சுவை இருக்கின்றது.
ஸாதிகா

arusuvai is a wonderful website

பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி.
ஸாதிகா

arusuvai is a wonderful website

பட்டானிப்பருப்பை Yellow Split என்றும், கடலைப்பருப்பை channa dhaal என்றும் சொல்வார்கள்.
கடலைப்பருப்பு ஒரேமாதிரி அழகாக இருக்கும். பட்டானிப்பருப்பு unevanஆகவும், ஆங்காங்கே மஞ்சளோடு பச்சையும் கலந்து இருக்கும்.

உத்தமி.

தளிக்கா நானும் பட்டாணி பருப்பில் தான் முப்பருப்பு வடை செய்வேன், ஆனால் அது இது வரை பெயரை பார்த்ததில்லை உங்களுக்காகவேன் நேற்று கடலை பருப்பு உள்ள கவரையும் பட்டானி பருப்பு உள்ள கவரையும் பார்த்தேன்.

டால் மட்டர் என்று இருக்கு .
பார்த்து அது வாங்கி இந்த வடையை செய்யுங்கள்.

ஜலீலா

Jaleelakamal

டால் மட்டரா அப்போ அது இங்கும் கிடைக்கிறதா..கண்டிப்ப வாங்கி செய்வேன் எனக்கு மிகவும் பிடித்தது பருப்பு வடை இங்கு எங்கு வாங்கினாலும் வீட்டில் செய்யும் சுவையில் கிடைப்பதில்லை கடுமுடு என பல்லே உடைந்து போகும் போல் உள்ளது

டியர் ஸாதிகா அக்கா வனிதா வுடைய உப்புமாவுடன் உக்னக்ள் தால் மட்டர் (பட்டாணி பருப்பு) ஒரிஜினல் செய்து சாப்பிட்டாச்சு நல்ல மொறு மொறுன்னு கிரிஸ்பியா.நானும் அப்படி தான் செய்வேன் இது உங்கள் அளவில் செய்தேன் நல்ல இருந்தது.

ஜலீலா

Jaleelakamal

ஜலீலா,அட.உப்புமாவுக்கு சட்னி.சர்க்கரை.ஊறுகாய்,சாம்பார்,மாசிசம்பல் போன்றவைதான் சைட் டிஷ்.உங்கள் ஸ்டைலில் ஒரு முறை உப்புமாவுக்கு மசால்வடை செய்யலாம்.
தளிகா,வெங்காயம் குறைவாக சேர்த்தால்,பருப்பு நன்கு ஊறப்படாமல் இருந்தால்,நன்கு அரைபடாமல் இருந்தாலும் வடை பல்லை நீங்கள் சொவது போல் ஹார்ட் ஆக அமைந்து விடும்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

அங்க கூட சாப்பிட்ட நார்த்தங்காய் ஊறுகாய், சர்க்கரை, புதினா வெள்ளரி துவையலை குறிப்பிட வில்லை.

உப்புமாவிற்கு வடை என் அம்மா செய்வார்கள் சின்னதில் சின்ன ஒரு ரூபாய் அளவிற்கு நிறைய வடை சுட்டு கொடுப்பார்கள்.
உப்புமாவிற்கு என் மாமியார் வீட்டில் வெங்காய முட்டை மற்றும் தக்காளி ஆம்லேட் தான்.

ஜலீலா

Jaleelakamal

ஷாதிகா ஆன்டி நேத்து உங்க ஒரிஜினல் மசால் வடை செய்தேன் இங்க நல்லா அடிச்சி தாக்கிட்டோம் :) :) சூப்பர்.

"Eliminate the time between the idea and the act."

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

அன்பு இலா,பின்னூட்டத்திற்கு நன்றி.
//இங்க நல்லா அடிச்சி தாக்கிட்டோம் :) :) சூப்பர்.//
இந்த வரிகளைப்பார்த்ததும் மகிழ்ச்சியாக இருந்தது.அங்கு பட்டாணிப்பருப்பு கிடைக்கின்றதா?இங்கு சென்ற வருடம் வரை நாங்கள் வசிக்கும் ஏரியாவில் கிடைக்காது.பாரீஸ்கார்னர் செல்லும் பொழுது வாங்கி வருவார்கள்.இப்போதுதான் இங்கு கிடைக்க ஆரம்பித்து உள்ளது.
ஸாதிகா

arusuvai is a wonderful website

திருமதி. ஜலிலா அவர்கள் இந்த குறிப்பினை பார்த்து தயாரித்த மசால் வடையின் படம்

<img src="files/pictures/aa55.jpg" alt="picture" />

மசால்வடை செய்து படம் எடுத்த தங்கை ஜலீலா,படத்தை வெளியிட்ட தம்பி அட்மின் இருவருக்கும் நன்றி.சுட்ட வடையுடன் சுடாத வடை,பட்டாணிபருப்பு அனைத்தையும் அழகாக படம் எடுத்த ஜலிக்கு ஒரு வைர காப்பு போட்டு விடலாம்.
ஸாதிகா

arusuvai is a wonderful website