கிராமத்து கறி குழம்பு

தேதி: January 27, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (3 votes)

 

1. ஆட்டுகறி - 3/4 கிலோ
2. வெங்காயம், பொடியாக நறுக்கியது - 1 (அ) சின்ன வெங்காயம் - 10
3. தக்காளி, பொடியாக நறுக்கியது - 1
4. கறிவேப்பிலை, கொத்தமல்லி
5. கடுகு, சீரகம், உளுந்து, கடலை பருப்பு - தாளிக்க
6. மிளகாய் வற்றல் - 10
7. தனியா - 1 மேஜைக்கரண்டி
8. மிளகு - 2 தேக்கரண்டி (விரும்பினால்)
9. பட்டை, லவங்கம்
10. கசகசா - 1 தேக்கரண்டி
11. ஏலக்காய் - 1 (விரும்பினால்)
12. தேங்காய், பொடியாக நறுக்கியது - 1/4 கப்
13. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
14. உப்பு
15. பூண்டு - 5 பல்
16. சோம்பு - 1/2 தேக்கரண்டி (விரும்பினால்)


 

கறியை தனியாக தண்ணீர் சிறிது விட்டு வேக விடவும். கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு காய்ந்ததும் மிளகாய் வற்றல், தனியா, மிளகு எல்லாம் தனி தனியாக வறுத்து வைக்கவும்.
இதில் பட்டை, லவங்கம், ஏலக்காய், சோம்பு, கசகசா, தேங்காய் சேர்த்து நைசாக அரைக்கவும்.
பாத்திரத்தில் 1 குழிக்கரண்டி எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்கவும்.
இதில் வெங்காயம், பூண்டு போட்டு வதக்கவும்.
நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும். பின் வேக வைத்த ஆடுக்கறியை அந்த தண்ணீருடன் தக்காளியுடன் சேர்க்கவும்.
இதில் அரைத்த விழுது, மஞ்சள் தூள், தண்ணீர், உப்பு சேர்த்து எண்ணெய் திரண்டு வரும்வரை கொதிக்க விடவும்.
கடைசியில் எண்ணெயில் வறுத்த கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து 2 நிமிடம் விட்டு எடுக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

ஹாய் வனிதா நலமா? இன்று உங்களுடைய கிராமத்து கறி குழம்பு வைத்தேன் மிகவும் நன்றாக இருந்தது.

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

மிக்க நன்றி மஹா. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இன்று இரவு சமையலில் பரோட்டாவிற்க்கு இதை சைட்டிஷ்ஷாக செய்தேன்பா.கசகசா என்னிடம் இல்லை.இங்கு கிடைக்கவும் கிடைக்காது.தாளிக்கும் போது கடுகு மட்டும் தான் போட்டேன்.தாளிக்கவும் என்று போட்டிருந்தீர்கள்.மேலே சொன்னதை பார்க்கவில்லை.எப்படியோ சுவை அபாரம்!!!

உங்க சமையலில் நீங்க தாளிக்க பயன்படுத்தும் போது எல்லாவற்றிலும் க.பருப்பு பயன்படுத்துவது சற்று வித்தியாசமா தான்பா இருக்கு.நான் பெரும்பாலும் உ.பருப்பை மட்டுமே பயன்படுத்துவேன்.உங்களுக்கு பரோட்டா என்றால் ரொம்ப பிடிக்குமா.யாரும் சமைக்கலாமில் பைரோஜா ஜமால் அவர்களின் பரோட்டாவை செய்து பாருங்க்.ரொம்ப டேஸ்டா இருக்குபா.இப்ப கூட அதை செய்து,அதுக்கு தொட்டுக்க இந்த குறிப்பை செய்தேன்பா.தங்களின் இந்த குறீப்புக்கு மிக்க நன்றி.

மிக்க நன்றி சுகன்யா :) நான் ரொம்ப நல்லாவே பரோட்டா செய்வேன் சுகன்யா, சோம்பேரி தனம் தான் செய்யாமல் இருக்க காரணம். காலேஜ் படிக்கும்போதே நான் நல்லா செய்யர ஒரே குறிப்பு பரோட்டா தான். ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

தீபாவளிக்கு மறுநாள் வனிதா உங்க கிராமத்து கறிக்குழம்பு செய்தேன்.. ஜலீலா அக்காவின் பஹாரா கானாவுடன் அருமையாக இருந்தது.. அப்புறம் இட்லி தோசைன்னு முடியும் வரை கொண்டாட்டம் தான் போங்க

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

மிக்க நன்றி இலா.... நலமாக இருக்கிங்களா???

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வணிதா அக்கா நேற்று கிராமத்து கறி குழம்பு,வாணி அக்கா மட்டன் சுக்காவும் செய்தேன்.நல்ல ருசி என் கணவர்ரும்,அவர் நண்பர் மட்டன் சாப்பிடாதவர் நேற்று மட்டன் குழம்பு இருமுறை வாங்கி சாப்பிட்டார்.இது மாதிரி வைத்தால் சாப்பிடுவான் என்றார். மட்டன் சாப்பிடாதவரை சாப்பிடவைதது உங்கள் குறிப்பு நன்றி அக்கா.உங்களது பின்னுட்டம் பார்த்தேன்.மீகவும் நன்றி அக்கா

மிக்க நன்றி சுதா. உங்கள் பதிவை நானும் பார்த்தேன். மகிழ்ச்சியாக இருந்தது. பதில் தான் போட முடியாமல் இருக்கிறேன். விரைவில் வருகிறேன். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா