Love

Hi nan riasabi

nan last 7 yearsa oruthara lov panran last year thaan romab poradi engagment mudinjathu

coming july 12 marg fix panni irukaanga .

yanaku unga tips waynum

en lover bayangara kovamana aala ethuku eduthaalum sunda varum chinna visayathuku kooda sunda varum. aana athellam maximum oru naal sariaaidum.

ippo konja naala yanaku konjum bayama iruku enga mrg piragu intha maari sunda wanthu ippo than marg panitomay inimay iva enga poiduvanu alatchiyama vitruvaro en mayla lov koranjudumo nu bayama iruku.

plz en lover ra nan rmba lov panra rmba pudikum rmba rmba pidikum. entha karnathuku avara mis panna virumbala .

plz ethum advice pannunga

plzzzzzzzzzzz.

bye

ஜூலை 12 ல மேரேஜ்ன்னு சொல்லிட்டு, ப்ரொஃபைல்ல ஹவுஸ் ஒய்ப் ன்னு கொடுத்தீங்கன்னா, என்னத்தான் அட்ராக்டிவான டைட்டிலா இருந்தாலும் படிக்கிறவங்களுக்கு இது உண்மையான பதிவான்னு ஒரு சந்தேகம் வந்துடும் :-) எது தவறோ அதை சரி பண்ணிடுங்க.

அப்புறம், உங்க பிரச்சனை பொதுவா நிறைய கணவன் மனைவிக்கு இடையே உள்ள பிரச்சனைதான். மத்தவங்களை சொல்றதைவிட என்னை மட்டும் உதாரணம் சொல்லி பதில் தர்றேன். இது அப்படியே எங்களுக்கும் பொருந்தும். உண்மையான புரிதல் இருக்கிறப்ப கோபம், சண்டையெல்லாம் சில மணி நேரம்தான். அதையும் தாண்டி விட்டுக்கொடுத்தல் இருந்தால் எந்தக் கோபமும் பெரிய சண்டையாகாது.

இப்ப எங்களையே எடுத்துக்கோங்க. எனக்கு கோபம் வர்றப்ப என் மனைவியும், என் மனைவிக்கு கோபம் வர்றப்ப என் மனைவியும் விட்டுக்கொடுத்துப் போயிடுறதால எங்களுக்குள்ள பெரிதா பிரச்சனைகள் வர்றதில்லை. :-) இப்படி ஒருத்தருக்கு ஒருத்தர் விட்டுக்கொடுத்துப் போனால் வாழ்க்கை என்றுமே சுவைக்கும். :-)

தவறுதலாக பதிவு போட்டுவீட்டீகளா? அல்லது எப்போதுமே உங்கள் மனைவி தான் விட்டு தருவாங்களா?

nanriyudan

அட்மின் சரியாதேன் சொல்லி இருக்காக... அவிங்க வீட்டம்மா ரொம்ப அமைதிதேன்...

"If you want to feel rich, just count the things you have that money can't buy."

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

ஹலோ இலா, அய்யோ, எனக்கு இந்த விசயம் எல்லாம் தெரியாதே....

nanriyudan

என்ன நம்ம இலாவை இவ்வளவு சாதாரணமா எடை போட்டுட்டீங்க??இலா யாரு??!! :-))

Patience is the most beautiful prayer!!

Patience is the most beautiful prayer!!

அண்ணா... நான் கொஞ்சம் நேரம் முன்னாடி இவங்க பதிவு பாத்துட்டு இதே சந்தேகத்துல தான் பதில் ஏதும் போடாம, சந்தேகத்தையும் கேக்காம விட்டேன். நீங்க சொல்லிட்டீங்க. :) ஆனாலும் உங்களுடைய "விட்டு குடுக்கும்" பதிவை பார்த்துட்டு ஒரு 10 நிமிஷம் வாய்விட்டு சிரிச்சேன். :D ஹஹஹா.... (தனியா பயித்தியமாட்டும் சிரிச்சது வேற கதை...) நீங்க பேசும்போதெல்லாம் எனக்கு நல்லா பழக்கமான ஒருவரை நினைவுபடுத்துது. நல்லா பேசுறீங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அட்மின் தவறுதலா போட்டிருக்க மாட்டார். ரொம்ப கிளியராத் தான் சொல்லியிருக்கரார். ஆனா நாம தான் கொஞ்சம் அப்படியே உல்டாவா மாத்தி படிக்கனும். ஹி. ஹி.

நண்பி riasabi நீங்கள் இப்பிடி தமிங்கிலீஸ்ல எழுதினா என்னைப்போல மக்குகளுக்கு விளங்காது .
அதைவிட நிறையப்பேர் பதில் சொல்ல வரமாட்டினம் சரியோ.கீழ எழுத்துதவி இருக்கு பயன்படுத்துங்கோ.

நீங்கள் உதவி கேட்ட உடன் எழுதத்தொடங்கினான் எல்லாம் அழிஞ்சுட்டு [நன்றி வைரஸ்]
ஆனாலும் மனம் தளராமல் மீண்டும் முருங்கில் ஏறுகிறேன்.

1.அது சரி 7 வருடமாக காதலிக்கும்போது சிந்திக்காத ஒரு விடயத்தை நிச்சயதார்த்தத்தின்
பின் சிந்திக்க காரணமென்ன?
2.அடுத்து இப்போதாவது அதாவது திருமணத்துக்கு இன்னும் 6 மாதங்களே இருக்கையில்
நிஜ வாழ்க்கையைப்பற்றி சிந்திக்கிறீர்களே நல்லது.
3.உங்கள் லவ்ஸ் பயங்கர கோவக்காரப்புள்ள அதனால் எதிர்கால குடும்ப வாழ்க்கை நின்மதியில்லாமல்
போய்விடுமோ எண்டு பயப்பிடுறீங்கள் அப்பிடித்தானே?
4.பொதுவாக ஆண்கள் எல்லோருமே கோவமும் ஆதிக்க உணர்ச்சியும் கொண்டவர்கள்தாம்.
காரணம் அவர்களுக்கு உடலில் சுரக்கும் ஒரு ஹோமோன் ம் சமூகப்பின்ணணியும்தான்.
ஆகவே இதை காரணமாக வைத்து நீங்கள் நெகட்டிவா ஒரு முடிவெடுக்காமல் இதற்கான மாற்று வழிகளைப்பற்றி சிந்தியுங்கள்.
அதாவது கோவ உணர்ச்சி இல்லாத ஒருவரை நீங்கள் கண்டடைவது கடினம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வடிவில் அதாவது
வித்தியாசம் வித்தியாசமான வெளிப்பாடு இருந்தாலும் அடிப்படை கோவ உணர்ச்சி மனித இரத்தத்தில் ஊறிய ஒன்று.
5.திருமண வாழ்வு என்று பார்க்கும் போது இருசார்பிலும் சமமான கோவம் பிடிவாதம் இருந்தால்தான்
வாழ்க்கைக்கு கூடாது.அதனால் உங்களில் நம்பிக்கை வையுங்கள்.
6.உங்கள் லவ்ஸ் கோவக்காரர் என்றால் உங்கள் கோவத்தை இப்போதே மூட்டை கட்டி வைத்து விடுங்கள்.
7.குடும்ப வாழ்க்கையின் ஆரம்ப கால நிகழ்வுகள் என்பது வாழ்வில் எப்போதுமே ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருக்கும் ஆதலால்
உங்கள் வாழ்வை ஆரம்பிக்குமுன்னமே உங்களை தயார்படுத்திக்கொள்ளும் உங்கள் சிந்தனை நன்றே.
8.நீங்கள் ஒரு சைகிரட்றிஸ் டாக்டரிடம் சென்றால் நீங்கள் எப்படி நடக்க வேண்டும் என்பதை அவர் விளக்குவார்.
இதில் எந்த தவறும் கிடையாது.கண்ணை மூடிக்கொண்டு குழியில் விழுவதைவிட கண்ணைத்திறந்து கொண்டு விலகிச்செல்வதுதான் ஆரோக்கியமானது.
ஆகவே இதில் வெக்கப்படவோ இதெல்லாம் டாக்டரிடம் ஆலோசனை கேட்கவேண்டிய ஒரு விடயமே இல்லை என்று
நீங்கள் பின்னிற்கவோ தேவையில்லை.உங்களுடைய கசப்பான அனுபவங்களைக்கேட்டு அதற்கான ஆலோசனையை அவர் தருவார்.
தெளிவான மனதுடன் வாழ்வை ஆரம்பிக்க இது உதவும்.
9.உங்கள் திருமண வாழ்க்கை சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.மேலதிக விபரங்களுக்கு நாடவேண்டிய இடம் அருசுவைத் தளம்.
இன்னும் பலர் வருவார்கள் .கவலை வேண்டாம்.

சுரேஜினி

சுரேஜினி,
கவலை வேண்டாம். நீங்க கஷ்டப்பட்டு டைப் பண்ணிய அட்வைஸ் வேறு யாருக்காவது உபயோகப்படும்.

ஹலோ.. ஒருத்தருக்கு(கணவருக்கு) ஒருத்தர்(மனைவி) விட்டுக்கொடுத்துப் போகணும்ங்கிற உயர்ந்த வாழ்க்கை தத்துவத்தை ஸ்மைலி போட்டு சொன்னதால என்னை வைச்சு எல்லோரும் காமெடி பண்ணிக்கிட்டு இருக்கீங்க.. ம்ம்ம்..

மேலும் சில பதிவுகள்