காளான் வேர்க்கடலை மசாலா

தேதி: January 28, 2009

பரிமாறும் அளவு: 3 நபர்களுக்கு.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பட்டன் காளான் - 10,
பச்சை நிலக்கடலை - 1/4 படி,
பெரிய வெங்காயம் - 2,
தக்காளி - 2,
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி,
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி,
மிளகாய்த்தூள் - 1தேக்கரண்டி,
தனியாத்தூள் - 1/2 தேக்கரண்டி,
கரம் மசாலா தூள் - 1 தேக்க்ரண்டி,
உப்பு - தேவையான அளவு,
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி.


 

வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.
காளானை கழுவி நைசான, மெல்லிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
நிலக்கடலையை வேக வைத்து உரித்து வைக்கவும்.
வாணலியில் எண்ணெயை ஊற்றி நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.
அத்துடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
நன்கு வதங்கியதும், மிளகாய்த்தூள், கரம் மசாலா, தனியாத்தூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
வேகவைத்த நிலக்கடலை, நறுக்கிய காளான், உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்து மூடி வைக்கவும்.
காளான் வெந்து, கெட்டியானதும் இறக்கவும்.


சப்பாத்திக்கு நன்றாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

மசாலா ரொம்ப அருமையா இருந்தது செல்விமா.வித்தியாசமான் குறிப்புக்கு மிக்க நன்றி.இன்னும் காளான் ரெஸிபி தெரிந்தால் சொல்லுங்கம்மா.