டோக்ளா

தேதி: January 28, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

துவரம்பருப்பு - 1/2 கப்
உளுத்தம்பருப்பு - 1/2 கப்
கடலைப்பருப்பு - 1/2 கப்
பாசிப்பருப்பு - 1/2 கப்
இட்லிஅரிசி - 1 கப்
உப்பு - சுவைக்கு
மிளகாய் பொடி - 1டீஸ்பூன்
பச்சைமிளகாய் - 4
கடுகு - 1/4 டீஸ்பூன்
சீரகம் - 1/4 டீஸ்பூன்
தேங்காய்துருவல் - 4 டீஸ்பூன்
எண்ணெய் - தாளிக்க


 

அரிசி, பருப்பை ஊற வைத்து, இட்லிமாவு பதத்தில் அரைத்துக்கொள்ளவும்.
உப்பு கலந்து முதல் நாளே புளிக்க வைக்கவும்.
மறுநாள் சிறிய இட்லிகளாக ஆவியில் வேக வைக்கவும்.
நன்கு ஆற விட்டு சிறிய சதுரங்களாக நறுக்கவும்.
வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் விட்டு, கடுகு, சீரகம், பச்சைமிளகாய் தாளித்து, தேங்காய்த்துருவல், மிளகாய்பொடி சேர்க்கவும்.
நறுக்கிய இட்லி துண்டங்களை சேர்த்து கலந்து, பச்சை சட்னியுடன் பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்