பொட்டேட்டோ & பீஸ் கட்லெட்

தேதி: January 28, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

உருளைக்கிழங்கு - 500 கிராம்
வேகவைத்த பட்டாணி - 1 கப்
வெங்காயம் - 2
இஞ்சி பூண்டு விழுது - 1 1/2 மேசைக்கரண்டி
மல்லிக்கீரை - 3/4 கப் (பொடியாக வெட்டியது)
கறிவேப்பிலை - 1/2 கப் (பொடியாக வெட்டியது)
பச்சைமிளகாய் - 3
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
முட்டை வெள்ளைக்கரு - 2
ப்ரெட் க்ரம்ப்ஸ்(ப்ரெட் தூள்) - 2 கப்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு


 

உருளைக்கிழங்கை வேகவைத்து கட்டியில்லாமல் மசித்துக் கொள்ளவும்.
காய்ந்த பட்டாணியாக இருந்தால் ஊறவைத்து வேகவைத்து 1 கப் அளவு எடுக்கவும். ப்ரோசன் பட்டாணியாக இருந்தால் அப்படியே பயன்படுத்தலாம்.
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பொடியாக வெட்டிய வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
முக்கால் பாகம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி பட்டாணி, மிளகாய்தூள், உப்பு சேர்த்து மேலும் 2 நிமிடம் வதக்கி இறக்கவும்.
மசித்த உருளைக்கிழங்கோடு வதக்கி ஆற வைத்த வெங்காய பட்டாணி கலவை, மல்லிக்கீரை, கறிவேப்பிலை, 1கப் ப்ரெட் தூள், உப்பு சேர்த்து பிசையவும்.
கலவையிலிருந்து எலுமிச்சை அளவு எடுத்து கட்லெட்டுகளாக தட்டவும்.
இந்த கட்லெட்டுகளை முட்டையின் வெள்ளைக்கருவில் முக்கி ப்ரெட் தூளில் புரட்டி எடுத்து வைக்கவும்.
20 நிமிடம் ஃப்ரீசரில் வைத்து எடுத்து சூடான எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். டொமேட்டோ சாஸ் சில்லி சாஸுடன் பரிமாறவும்.


கட்லெட்டின் எல்லா பாகங்களிலும் ப்ரெட் தூளை நன்றாக புரட்ட வேண்டும். இல்லையென்றால் கட்லெட் உதிர்ந்து விடும். ப்ரெட் தூளில் புரட்டிய கட்லெட்டுகளை தட்டில் பரவலாக அடுக்கி 2 மணிநேரம் ஃப்ரீசரில் வைத்து எடுத்து பின்னர் சிப்லாக் கவரில் போட்டு ஃப்ரிசரில் 10 நாட்கள் வரை வைத்து பயன் படுத்தலாம்.

மேலும் சில குறிப்புகள்