மிக்சர் வறுவல்

தேதி: April 2, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

உருளைக்கிழங்கு - 6
வாழைக்காய் - 3
சிறிய கருணைக்கிழங்கு - ஒன்று
முந்திரிப்பருப்பு - 30
கொண்டைக்கடலை - அரை ஆழாக்கு
வேர்க்கடலைப் பருப்பு - அரை ஆழாக்கு
தேங்காய் - அரை மூடி
எண்ணெய் - 200 கிராம்
மிளகாய் வற்றல் - 15
நெய் - 5 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - சிறிது
பெருங்காயம் - சிறிது
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு


 

முதலில் கொண்டைக்கடலையை நீரில் சுமார் எட்டு மணிநேரம் ஊறப்போட்டு நன்றாக உலர்த்திக் கொள்ளவும்.
வேர்க்கடலையை வறுத்துத் தோல் நீக்கித் தனியாக வைத்துக் கொள்ளவும்.
பிறகு உருளைக்கிழங்கு, வாழைக்காய், கருணைக்கிழங்கு ஆகியவற்றை நன்றாகக் கழுவி வில்லைகளாக நறுக்கி மஞ்சள் தூளில் புரட்டி கையாலேயே தனித்தனியாக பரப்பி காயவைத்துக் கொள்ளவும்.
தேங்காயை துருவிக் கொண்டு முந்திரிப் பருப்பை இரண்டாக உடைத்து அவற்றையும் தனியாக வைத்துக் கொள்ளவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றிக் கொண்டைகடலையைப் போட்டு ஒரு தட்டால் மூடி விடவேண்டும். ஏனென்றால் கொண்டைக்கடலை வெடித்துச் சிதறும்.
பிறகு கடலை வெடித்து அடங்கியதும் மூடியை நீக்கிவிட்டு அதை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் நெய் விட்டு முந்திரிப் பருப்பையும் தேங்காயைத் துருவலையும் மற்றும் கறிவேப்பிலையையும் தனித்தனியாக வறுத்தெடுத்துக் கொள்ளவும்.
பிறகு வறுத்து எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து அரைத்து அந்த மிக்சரை ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும்.
வில்லைகளாக நறுக்கி வைத்திருக்கும் காய்கறிகளுடன் மிளகாய்வற்றல், பெருங்காயம் ஆகியவற்றைத் தூள்பண்ணிச் சேர்த்துத் தட்டிலுள்ள மிக்சரில் புரட்டியெடுக்கவும்.
பின்னர் அடுப்பில் வாணலியை வைத்து நிறைய எண்ணெய் விட்டு அந்த வில்லைகளை வறுத்தெடுக்கவும்.


மேலும் சில குறிப்புகள்