ஸ்பைசி க்ராப் மசாலா

image

வழங்கியவர் : asiya omar

தேதி : புதன், 28/01/2009 - 21:28

ஆயத்த நேரம் : 20 நிமிடம்

சமைக்கும் நேரம் : 30 நிமிடம்

பரிமாறும் அளவு : 4 -6 நபர்களுக்கு

0
No votes yet
Your rating: None
 

 

  • நண்டு - 1 கிலோ
  • எண்ணெய் - 100 மில்லி
  • இஞ்சி பூண்டு - 2 டீஸ்பூன்
  • கரம் மசாலா - அரை ஸ்பூன்
  • வெங்காயம் - 100 கிராம்
  • தக்காளி - 200 கிராம்
  • மிளகாய் வற்றல் - 4
  • மஞ்சள் பொடி - அரை ஸ்பூன்
  • மிளகு - 2 டீஸ்பூன்
  • சீரகம் - 1 டீஸ்பூன்
  • மல்லி - 2 டீஸ்பூன்
  • சோம்பு - அரை ஸ்பூன்
  • தேங்காய் - 4 டேபிள் ஸ்பூன் + 4 முந்திரி(விருப்பப்பட்டால்)
  • பச்சை மிளகாய் - 2 - 4
  • உப்பு - தேவைக்கு
  • கறிவேப்பிலை - 2 இணுக்கு
  • மல்லி இலை - ஒரு கைப்பிடியளவு.

 

  • முதலில் நண்டை சுத்தம் செய்து கழுவி தண்ணீர் வடிகட்டி நண்டு மூழ்கும் அளவு தண்ணீர் வைத்து மஞ்சள் பொடி சேர்த்து கொதிவந்ததும் தண்ணீரை வடிகட்டிவிடவும். (இப்படி செய்வதின் மூலம் அதிகம் கவுச்சி வாடை இருக்காது, பாதி வெந்தும் விடும். சாப்பிடும் போது சாஃப்டாக இருக்கும்.) வெங்காயம், தக்காளி, மல்லி இலை கட் செய்து கொள்ளவும்.
  • வாணலியில் எண்ணெய் காயவைத்து வற்றல், கறிவேப்பிலை போடவும். வெங்காயம் சேர்த்து வதக்கி, இஞ்சி பூண்டு, கரம் மசாலா, தக்காளி, உப்பு சேர்த்து மூடி சிம்மில் வைக்கவும்.
  • மிளகு, மல்லி, சீரகம், சோம்பு லேசாக வறுத்துகொள்ளவும். மிக்ஸியில் மிளகு, சீரகம், மல்லி, சோம்பு தூள் செய்து அத்துடன் தேங்காய், முந்திரி, பச்சை மிளகாய், மல்லி இலை சேர்த்து நன்கு அரைத்து எடுக்கவும்.
  • வாணலியில் வெங்காயம், தக்காளி கிரேவி மசிந்து வந்தவுடன் நண்டை சேர்க்கவும். மூடி போட்டு 10 நிமிடம் வேகவிடவும். உப்பு பார்த்து சேர்க்கவும், கொஞ்சம் கூடினாலும் கடுத்துவிடும்.
  • பின்பு அத்துடன் அரைத்தமசாலா, தேங்காய் கலவை சேர்த்து 15 நிமிடம் வைத்து தேங்காய் வாடை அடங்கி எண்ணெய் தெளிந்து கெட்டியானவுடன் இறக்கவும்.
  • சூப்பர் சுவையுள்ள ஸ்பைசி க்ராப் மசாலா ரெடி.

Note:

இது நாண், சப்பாத்தி, ஃப்ரைட் ரைஸ் உடன் பரிமாறலாம். காரம் அவரவர் விருப்பத்திற்கு தகுந்தபடி போட்டுக்கொள்ளவும்.