க்ரீன் சட்னி

தேதி: January 29, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கொத்தமல்லி இலை - 2 கைப்பிடியளவு
புதினா - ஒரு கைப்பிடியளவு
தேங்காய் துருவல்- 2 டேபிள் ஸ்பூன் (விரும்பினால்)
பச்சைமிளகாய் - 4
புளி - புளி கொட்டை அளவு
உப்பு - அரை ஸ்பூன்
தாளிக்க: (விரும்பினால்)
எண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு, உளுத்தம்பருப்பு - அரை ஸ்பூன்
மிளகாய் வற்றல் - 1
கறிவேப்பிலை - 1 இணுக்கு


 

மல்லி இலை, புதினாவை ஆய்ந்து மண் போக கழுவவும். இலேசாக வெதுப்பிக்கொள்ளவும்.
மிக்ஸியில் மல்லி, புதினா, மிளகாய், உப்பு, புளி சேர்த்து ஒரிரு சுற்று சுற்றவும். தேங்காய் சேர்க்கவும்(விரும்பினால்). பின்பு ஒரு டேபிள்ஸ்பூன் தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து எடுக்கவும்.
தேவையானால் கடுகு, உளுத்தம்பருப்பு, மிளகாய்வற்றல், கறிவேப்பிலை தாளித்து சட்னியில் கொட்டவும்.
சுவையான க்ரீன் சட்னி ரெடி.


மேலும் சில குறிப்புகள்


Comments

அக்கா இந்த சட்னி தோசைக்கு நன்றாக இருந்தது.
செல்வி

சவுதி செல்வி

மிக்க மகிழ்ச்சி.நன்றி.நீங்கதான் சவுதி செல்வியா?
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

நான்தான் கீதா,சுகன்யா சொன்ன சவுதி செல்வி.

சவுதி செல்வி

இந்த கிரீன் சட்னியும் ரொம்ப நல்லா இருந்தது மேடம்.நான் அந்த வெங்காய தக்காளி சட்னியும்,இதையும் செய்தேன்.இது சற்று காரம் குறைவாகவே செய்தேன்.ஒரு சட்னி காரமாகவும்,இந்த சட்னி சற்று காரம் குறைவாகவும் அமைந்து போக,தோசைக்கு சாப்பிட நல்ல காம்பினேஷனாக இருந்தது.தங்களோட இந்த குறிப்புக்கு நன்றி.

பின்னூட்டத்திற்கு மிக்க மகிழ்ச்சி.நன்றி.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.