அத்திப்பழ ஹல்வா

தேதி: January 29, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

அறுசுவையில் ஏராளமான சமையல் குறிப்புகள் கொடுத்துவரும் <b> திருமதி. செய்யது கதீஜா </b> அவர்களின் தயாரிப்பு இந்த அத்திப்பழ ஹல்வா. சுவையான இந்த ஹல்வாவை செய்து பார்த்து உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

 

பால் - 1 1/2 லிட்டர்
அத்திப்பழம் - 150 கிராம்
பேரீச்சம் பழம் - 3
நெய் - 150 கிராம்
சீனி - 400 கிராம்
பாதாம் - 100 கிராம்
முந்திரி - 100 கிராம்
பிஸ்தா - 25 கிராம்


 

மேலே குறிப்பிட்டுள்ள தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
பாதாம், முந்திரி, பிஸ்தா ஆகியவற்றை இரு பாதியாக பிரித்து வைத்துக் கொள்ளவும். அதில் ஒரு பாதியை பொடியாக நறுக்கி கொள்ளவும். மறுபாதி பருப்புகளை நீளவாக்கில் நறுக்கி வைக்கவும்.
பாலை ஒரு நாண் ஸ்டிக் பாத்திரத்தில் ஊற்றி காய்ச்சவும்.
அத்திப்பழம், பேரீச்சம் பழத்தை சிறிய துண்டுகளாக நறுக்கி காய்ச்சிய பாலில் அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
ஊற வைத்த பழங்களை மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்து பாலில் போட்டு நன்கு காய்ச்சவும்.
பால் கொதித்து நன்கு வற்றி வரும் போது சீனியை சேர்த்து கிளறி விடவும்.
பிறகு பொடியாக நறுக்கி வைத்திருக்கும் பருப்புகளை சேர்த்து கிளறவும்.
நல்ல கெட்டியாக வரும் போது தீயை மிதமாக வைத்து நெய்யை சேர்த்து கிளறி விடவும்.
ஹல்வா நன்கு கெட்டியாகி சுருண்டு வந்ததும் நீளவாக்கில் நறுக்கிய பருப்புகளில் சிறிதை சேர்த்து கிளறி இறக்கவும்.
பின் ஒரு டப்பாவில் நெய் தடவி அதில் ஹல்வாவை கொட்டி பரப்பி விடவும். மேலே மீதமிருக்கும் பருப்புகளை தூவி அலங்கரிக்கவும். சுவையான, சத்தான அத்திப்பழ ஹல்வா தயார்.

சில்வர் லீவ்ஸ் பேப்பர் இருந்தாலும் மேலே வைத்து அலங்கரிக்கலாம். நெய் சேர்த்த பின்னர் மேலே தெரிக்கும் கவனமாக கிளறவும். தீயை மிதமானதாக வைத்தே செய்யவும். அடிக்கடி அடியில் பிடித்துவிடாமல் கிளறி விடவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

it is very different receipy because i never eat before ok i try this receipy, all the best

ஹாய் கதீஜா,
ஜப்பானில் அத்திபழம்லா கிடைக்குதா. ரொம்ப வித்யாசமான குறிப்பு. அப்பியரென்ஸ பார்க்கும் போது டேஸ்டு ரொம்ப நல்லாவே இருக்கும் என தோனுது. ஜப்பானில் எங்க இருக்கீங்க.

indira

கதிஜா நல்ல இருக்கீங்களா? சூப்பர் குறிப்பு கொடுத்து அசத்திட்டீங்க.
அத்தி பழம் உடம்புக்கு ரொம்ப நல்லதும் கூட.
இன்ஷாஃப் நலமா? சத்தமில்லால் ஒரு சூப்பர் ஹல்வா.

ஜலீலா

Jaleelakamal

ஆமாம் இது ஒரு வித்தியாசமான,சுவையான ரெசிபி செய்து பார்த்து சொல்லுங்க நன்றி.

அன்புடன் கதீஜா.

ஆமாம் இங்கு அத்திபழம் கிடைக்கும்.டேஸ்ட் ரெம்ப நல்லா இருக்கும்.செய்து பார்ந்த்து சொல்லுங்க. நான் ஒசாகாவில் இருக்கிறேன்.

அன்புடன் கதீஜா.

ஹொக்கைடொவிலிருந்தது (அதாவது சாப்பாரோவிலிருந்து) எவ்வளவு தூரத்தில் உள்ளது ஒசாகா. அத்தி பழத்திற்கு ஜாப்பான் மொழியில் என்ன பெயர் தெரிந்தால் சொல்லுங்கள்.

சயனோரா
இந்திரா

indira

நான் நல்லா இருக்கேன். இன்சாஃப் நல்லா இருக்கான். உங்கள் கருத்துக்கு நன்றி.

அன்புடன் கதீஜா.