கிட்ஸ் போன்லெஸ் சிக்கன் ஃப்ரை சமையல் குறிப்பு - படங்களுடன் - 11135 | அறுசுவை


கிட்ஸ் போன்லெஸ் சிக்கன் ஃப்ரை

வழங்கியவர் : asiya omar
தேதி : வியாழன், 29/01/2009 - 17:40
ஆயத்த நேரம் :
சமைக்கும் நேரம் :
பரிமாறும் அளவு :
0
No votes yet
Your rating: None

 

 • சிக்கன் ப்ரெஸ்ட் - அரை கிலோ
 • எண்ணெய் - 100 மில்லி
 • சில்லி பவுடர் - ஒரு தேக்கரண்டி
 • இஞ்சி பூண்டு - ஒரு தேக்கரண்டி
 • தயிர் - ஒரு மேசைக்கரண்டி
 • லெமன் ஜூஸ் - ஒரு மேசைக்கரண்டி
 • ப்ரெட் க்ரம்ஸ் - ஒரு மேசைக்கரண்டி
 • கடலை மாவு - ஒரு மேசைக்கரண்டி
 • முட்டை - 1 (வெள்ளைக்கரு)
 • ரெட் கலர் - ஒரு பின்ச்
 • உப்பு - தேவைக்கு

 

சிக்கனை சிறிய துண்டுகளாக நறுக்கி சுத்தம் செய்து கழுவி தண்ணீர் இல்லாமல் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.

சிக்கன் செய்ய தேவையானவற்றை தயாராக எடுத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த சிக்கனை போட்டு தயிர், உப்பு, லெமன் ஜூஸ், இஞ்சி பூண்டு விழுது, சில்லி பவுடர், ப்ரெட் கிரம்ஸ், கடலை மாவு, முட்டையின் வெள்ளை கரு, ரெட் கலர் ஆகியவற்றை சேர்க்கவும்.

எல்லாவற்றையும் சேர்த்து நன்கு ஒன்றாக பிசைந்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.

ஒரு நாண் ஸ்டிக் பேனில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஊற வைத்திருக்கும் சிக்கனை போட்டு சிவக்க பொரித்தெடுக்கவும்.

சிக்கன் நன்கு பொரிந்து வெந்ததும் எடுத்து டிஸ்யு பேப்பர் விரித்த ஒரு பேனில் போட்டுக் கொள்ளவும்.

அதே எண்ணெயில் ப்ரென்ச் ப்ரைஸை பொரித்தெடுத்து சிக்கனுடன் சேர்த்து பரிமாறலாம்.

சுவையான ஜூஸியான கிட்ஸ் சிக்கன் ப்ரை தயார். இந்த குறிப்பினை அறுசுவை நேயர்களுக்காக <b> திருமதி. ஆசியா உமர் </b> அவர்கள் செய்து காட்டியுள்ளார். இந்த குறிப்பினை நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.ஆசியா அக்கா

வாவ் ஈசி அண்ட் யம்மி ரெசிப்பி. வாழ்த்துக்கள் ஆசியாக்கா.சூப்பரா இருக்கு. நடுவில் உள்ள மூன்று படங்கள் ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு பார்கா அழகா.

indira

ஆசியா

ஆசியா மேடம். சிக்கன் ப்ரை பார்தாலே சாப்ட தோனுது இப்போதே சிக்கன் வாங்கி வர சொல்லி செய்து பாக்க போகிறேன் இல்லையென்ரால் எனக்கு இன்னைக்கு தூக்கமே வராது.

நன்றி,இந்திரா,மஹாசிவா

பாராட்டுக்கு நன்றி.செய்து பார்த்துவிட்டு சொல்லுங்க.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ஆசியாக்கா

ரொம்ப சூப்பரா இருக்கு கிட்ஸ் சிக்கன் ப்ரை. பார்க்கும் போதே தெரியுது டேஸ்டும் சூப்பரா இருக்கும்னு. நிறைய இதுபோல கொடுங்க அக்கா. செய்து விட்டு சொல்கிறேன். ப்ரென்ச் ப்ரைஸ் ப்ரோசன் வாங்கி பொரித்தீர்களா

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

சிக்கன் ஃப்ரை

இது கட்டாயம் சுவையாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை..நன்றாக ப்ரெசென்ட் பன்னியிருக்கிறீர்கள் ஆசியாக்கா

சிக்கன் ஃபிரை

ஆசியா,அழகான படங்களுடன் அருமையான் குறிப்பு கொடுத்து இருக்கின்றீகள்.மசாலாபொருட்களுடன் பிரட் க்ரம்ப்ஸையும் சேர்த்து கலந்தால் கிறிஸ்பியாக வருமா?
ஸாதிகா

arusuvai is a wonderful website

ஸாதிகா,தனிஷா,தளிகா

பார்வையிட்டு கருத்து சொன்னமைக்கு மிக்க நன்றி.
ஸாதிகா ப்ரெட் கிரெம்ப்ஸ் உடன் கடலை மாவும் சேர்வதால் ஓரளவு கிரிஸ்பியா இருக்கும்.
தனிஷா,ஃப்ரொசன் ஃப்ரென்ச்ஃப்ரைஸ் தான்.சும்மா எப்பவாவது செய்து பிள்ளைகளுக்கு கெட்சப்புடன் கொடுப்பேன்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

சிக்கன் பிரை

ஆசியா குழந்தைகளுக்கு ரொம்ப பிடிச்ச போன் லெஸ் சிக்கன் பிரை அருமை.நானும் இது போல் அடிக்கடி செய்வதுண்டு
ஜலீலா

Jaleelakamal

ஆசியா

பார்கவே ரொம்ப நல்லா இருக்கு கிட்ஸ் சிக்கன் ஃப்ரை.

நன்றி

Mb

ஜலீலா,மைதிலி

ஜலீலா ,கருத்துக்கு மிக்க மகிழ்ச்சி,உங்கள் குறிப்பில் இல்லாததே இல்லை.என்றாலும் பாராட்டியமைக்கு நன்றி.
மைதிலி செய்து பாருங்க,மிக்க மகிழ்ச்சி.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.