நான் ரெடி நீங்கள் அனைவரும் ரெடியா?

ஹாய் அறுசுவை தோழிகள் அனைவருக்கும் வணக்கம். நான்தான் பாப்பி, உங்கள் அனைவரிடமும் பேசுவதற்காக வந்து உள்ளேன் நான் ரெடி நீங்க ரெடியா எல்லோரும் எப்படி இருக்கிறீங்க?

உங்கள் முகம் பயப்படியெல்லாம் இல்லை. அழகிய வட்டவடிவான முகம். அப்புறம் தலைப்பு எல்லாம் பெருசா போடக்கூடாதுனு நேத்து பாபு அண்ணா சொல்லியிருக்கார் பாப்பி பார்க்கவில்லையா ;-)

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

ஸாதிகா மேடம் நான் இப்போதான் சமையல் கற்று கொண்டு இருக்கிறேன். அதனால் அதிக குறிப்புகள் தெரியாது. ஏதோ கொஞ்சம் தெரியும். கூட்டாஞ்சோறு குறிப்புள் சிலவற்றை பார்த்து சமைத்து போட்டோ எடுத்து இருக்கிறேன். அது விரைவில் புதிய தளம் வெளியாகும் போது என்னுடைய குறிப்புகள் வெளியாகும். கல்யாணத்துக்கு முன்பு எனக்கு சமையல் தெரியாது. அறுசுவைக்கு வந்த பிறகு பாபு யாரும் சமைக்கலாம் என்ற பகுதியை எங்களிடம்(நானும் மற்றும் பத்மா) போட்டோஸ் கலட் பண்ணும் போது நிறைய குறிப்புகள் கற்று கொண்டேன். பிறகு இங்க அம்மாவிடம் கற்றுக் கொண்டேன். வீட்டில் இருக்கும் போது சமைக்க தெரியாது ஆனா நல்லா டேஸ்ட் பார்க்க தெரியும்.

கவி நான் Bsc physics படித்திருக்கிறேன். பரவாயில்லை ஈஸியாதான் இருக்கு கேள்வி.

senbagababu

ஹாய் தனிஷா நா பார்க்கவில்லை நல்ல வேலை நீங்க சொன்னீங்க ரொம்ப நன்றி.

senbagababu

செண்பக வல்லி
பாப்பி, நீங்கள் உங்களுக்கு இந்தப் பெயர் பிடிக்கவில்லை எனச் சொல்லியிருக்கிறீங்கள். அப்படி நினைக்கவே வேண்டாம். நான் முதன் முதலில் எங்கேயோ ஒரு பதிவில் பார்த்தேன் இப் பெயரை, அப்போ நினைத்தேன் எவ்வளவு அழகான பெயரென்று.

செண்பகம் என்று ஒரு பறவை இலங்கையில் இருக்கிறது. அதிகம் குளிர்காலங்களில்தான் காணலாம் என நினைக்கிறேன். அமைதியான பறவை, கறுப்புத் தலையும் பிறவுண் உடம்பும் அதற்கு. கிட்டத்தட்ட காகத்தின் அளவு அல்லது கொஞ்சம் பெரிய பறவை. அதை எனக்கு பிடிக்கும். உங்கள் பெயர் மிகவும் அழகாகது.

இங்கே பாருங்கள் ஷாதிகா அக்கா,கொம்பியூட்டரில், குடும்பத்தோடு கிரிக்கெட் மச் பார்க்கிறா?:) ஷாதிகா அக்கா என்ன கன நாளாக காணவில்லை?

செல்வியக்கா கார்த்திகைப் பிறைபோல் வந்து போயிருக்கிறீங்கள்? உடம்பு நலமோ?
பாப்பி புதுத் தலைப்பு போடுங்கோவன்... இது நீஈஈஈஇண்டு விட்டது.

கவிஎஸ்... எதையாவது கேட்கவேண்டுமே என்று இப்படியெல்லாம் கேட்கலாமோ? கொஞ்சம் சுவாரஷ்யமாக .."கடைசியா அட்மின் எப்போ கடுமையாகக் கோபித்தவர்" இப்படி கேட்கலாமே?:) நான் இல்லை... நான் இல்லை... என்னை விடுங்கோ நான் சமைத்து... பகுதிக்கு ஓடுறேன்.....

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

என்ன பாப்பி என் கேள்விக்கு நீங்களும், அண்ணாவும் பதில் சொல்லவில்லையே.

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

தனிஷா வேலையில்லாம் முடிஞ்சுதாப்பா?பாப்பி பாகம் 2 ஆரம்பிச்சிட்டாங்க.அங்க போய் பதிவு போடுங்க!

அதிரா வேற கேள்விதான் மனசுல இருந்தது,செண்பகாவ நினைச்சேன் சரி பாவம்னு விட்டுடுட்டேன் ,அவங்களே இப்பதான் பேச ஆரம்பிச்சிருக்காங்க அதுக்குள்ள அவங்களை பயமுறுத்த வேணாம்னுதான் இப்படி ஒரு கேள்வி:-)
கொஞ்சநாள் போகட்டும் அப்புறமா நம்ம கேள்விக்கனைகளை அள்ளி வீசலாம்னு இருக்கேன்:-)

மேலும் சில பதிவுகள்