நான் ரெடி நீங்கள் அனைவரும் ரெடியா?

ஹாய் அறுசுவை தோழிகள் அனைவருக்கும் வணக்கம். நான்தான் பாப்பி, உங்கள் அனைவரிடமும் பேசுவதற்காக வந்து உள்ளேன் நான் ரெடி நீங்க ரெடியா எல்லோரும் எப்படி இருக்கிறீங்க?

முதலில் எனது அன்பான வணக்கம். முதன் முதலா கதைக்கிறேன், அதுதான் நல்லநாள் முடிவதற்குள் அவசரமாக பதிவு போடுகிறேன். என்னை உங்களுக்குத் தெரியுமோ தெரியாது. ஆனால் தப்பித்தவறிக்கூட அண்ணாவிடம் கேட்டிடாதீங்க இது யாரென்று. அறுசுவையில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கோ.

இருந்தாலும் உங்களோட கதைக்க கொஞ்சம் பயமா இருக்கு, ஏனென்றால் ஒரு உண்மை எனக்குத் தெரிஞ்சாகணும், அதன் பின்னர் தான் பயமில்லாமல் கதைக்கலாம்.

1)" நீங்கள் எங்கட பக்கம்தானே சப்போட் பண்ணுவீங்கள்?"

2)ஏன் இத்தனை காலமும் அறுசுவைக்குள் வரவில்லை?

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நீங்க ஏதாவது பேசுங்க. எனக்கு இதுதான் முதல் தடவை என்ன பேசுறது தெரியலை. நீங்க interestinga சொல்லுங்க.

senbagababu

ஹாய் அதிரா,
கேள்விகள் ஆரம்பமா? இன்னும் பதில் காணோம்....
நான் கழண்டுக்கரேன்..byee

அன்புடன்
கிருத்திகா

அன்புடன்
கிருத்திகா

வணக்கம். என்னோட பேசுவதற்கு உங்களுக்கு என்ன பயம். நீங்க எதுக்கும் பயப்படவேண்டாம். நான் எப்போதும் நல்லவங்க பக்கம் தான் இருப்பேன் கவலை படாதீங்க. இத்தனை நாள் அறுசுவை பக்கம் ஏன் வரவில்லை என்று எனக்கு தெரியலா. அதான் இப்போ வந்துடேன்லா.

senbagababu

bye நாளைக்கு அரட்டையை தொடருவோம். நான் தூங்க போறேன். bye

senbagababu

குறுக்கே வர்றதுக்கு மன்னிக்கணும்.. மேடம் அறுசுவையில வந்து பேசினது இல்லையே தவிர, டெய்லி அறுசுவை முழுக்க ஒரு ரவுண்ட் வந்துடுவாங்க.. எல்லா மன்றப்பதிவையும் படிச்சிடுவாங்க.. மன்றத்துல என்ன நடக்குதுன்னு எனக்கு சொல்றதே அவங்கதான்.. உங்க எல்லாரையும் நல்லாவே தெரியும். அதனால அறிமுகம் எல்லாம் வேண்டாம். எதாவது இண்ட்ரெஸ்டிங்கா பதிவு வரும்னு பார்த்தா, 33 ஐ தாண்டியும்.. உம்ஹூம்..

அப்புறம் மேடம் தமிழ்ல பிஹெச்டி வாங்கினவங்க.. சாதா தமிழ் எல்லாம் தெரியாது..;-) உங்களுக்கு எல்லாம் புரியுமோன்னு சந்தேகத்துலதான் இவ்வளவு நாளா வர்றதுக்கு தயக்கம். நான் தான் அதிராவே தமிழ்ல டைப் பண்றப்ப உனக்கு என்னன்னு சொல்லி இன்னைக்கு ஒரு பெரிய க்ளாஸே எடுத்து உள்ள வர வைச்சு இருக்கேன்.. எதுவும் கிண்டல் பண்ணி விரட்டிவிட்டுடாதீங்க.. :-)

புரிஞ்சுபோச்சு எல்லாமே புரிஞ்சு போச்சு... சிலபேருக்கு குளிர் வராமலே கை கால் எல்லாம் உதறத் தொடங்கிற்றுது. பாப்பி, இந்த அறுசுவைத் தோழிகளோடு கலந்தால் என் நிலை என்னாகுமோ என்று... அதுதான் நைசா வாழைப்பழத்தில ஊசி ஏத்துறமாதிரி சொல்லிப்போட்டார்... நாளைக்கு வெள்ளிக்கிழமை எல்லோ வேளைக்கு எழும்பவேணும்:) என்றெல்லாம்... சரி சரி இன்று விட்டுவிடுகிறோம்... இன்னொரு சந்தர்ப்பம் கிட்டாமலா போய்விடும்.

பாப்பி!!! நான் எவ்வளவு கஸ்டப்பட்டு என் பெயரை மூன்றெழுத்தில் வைத்திருக்கிறேன்.. நீங்கள் ஆறெழுத்தாக்கிப்போடுவீங்களோ:) எண்டு பயமாக இருக்கு.... பக்கத்தில எல்லாம் தேடினேன் ஆரும் அக்காமார் இருக்கிறார்களோ என்று:)

ஓகே உங்களோடு கதைத்தது சந்தோஷம்... இனிமேல் சிவபூஜையில் ஏதும் பூராத நேரம்:) பார்த்து வாங்கோ அப்பத்தான் நாங்கள் ப்றீயா கதைக்கலாம்:)

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அடடே பாப்பியக்கா!! இதுக்கு தான் சாப்பிடும் போது எதையாவது படிச்சே ஆகணும்ங்கற நல்ல பழக்கம் வெச்சுக்கணும்கறது.. இல்லனா மிஸ் பண்ணியிருப்பேனே இந்த மேட்டரை..

பாப்பியக்கா ரொம்ப பயந்த சுபாவம் உள்ளவங்க போல.. போதாக்குறைக்கு பாபு மாமாவை வேறு சமாளிச்சு இன்னும் அமைதியாகிட்டாங்களா இருக்கும்.. நாம மாத்திடுவோம் சகோஸ், வாட் ஸே?

பாபு மாமாவின் வேண்டுகொளுக்கு இணங்க, interestingஆன விஷயம் கேப்போம்:

1. அன்புள்ள அக்கா, உங்க காதல் கதையை கேட்டால் தப்பா.. ;) எவ்வளவு நாளு தான் நானும் வெயிட் பண்ணறது..? சும்மா ஓரளவுக்கு விபரமா உங்க காதல் - கல்யாண மேட்டரை சொல்ல கூடாதா? இதுக்கெல்லாம் நாங்க புலானாய்வு ஜர்னலிஸ்டா அனுப்ப முடியும்? :(

2. உங்க (நீங்க - மாமா சம்பந்த பட்ட) வாழ்க்கையில் இது வரை நடந்ததிலேயே நகைச்சுவையான மேட்டர்? (அதாவது மாமா அதி பயங்கர பல்ப் வாங்கிய சம்பவம்.)

3. இன்னிக்கு என்ன சமைச்சீங்க? இதை கேக்கலன்னா இந்த த்ரெட் "ஹையா ஜாலி" பகுதில இருக்க கூடாதுனு விதியாம்.. சொல்லிடுங்க ப்ளீஸ் :-)

பாபு மாமாவுக்கு மட்டும் interestingஆன விஷயம் பேசணும்னா, ஆங்கில தளம் வேலை எல்லாம் எப்படி இருக்கு? அறுசுவையை லிமிடெட் கம்பெனி ஆக்கும் எண்ணம் உண்டா? எப்போது? :D

அன்புடன்,
ஹேமா.

அன்புடன்,
ஹேமா.

எப்படி இருக்கரீங்க? சர்ப்ரைஸாக இருக்கு.

நீங்கள் இருவரும் சேர்ந்து பார்த்த முதல் படம் என்ன?-( நீங்கள் கேட்ட பாடல் நிகழ்ச்சியில் இது தான கேட்பாங்க)

அண்ணாவின் சமையலில் உங்களுக்குப் பிடித்தது என்ன?

முதல்ல என்னைப் பார்த்து கேட்ட கேள்விகளுக்கு பதில்..

// ஆங்கில தளம் வேலை எல்லாம் எப்படி இருக்கு? //

ரொம்ப நல்லா இருக்கு. என்ஞாய் பண்ணி செஞ்சுக்கிட்டு இருக்கேன் :-)

//அறுசுவையை லிமிடெட் கம்பெனி ஆக்கும் எண்ணம் உண்டா? எப்போது? :D//

ப்ரைவேட் லிமிடெட் ஆக்கி கொள்ளை காலம் ஆகிப் போச்சு. இன்னும் உருப்படியா எதுவும் செய்ய ஆரம்பிக்கல. புதிய தளம் வெளியான பிறகுதான் அதுல கான்சண்ட்ரேட் பண்ணனும்.

புதிய தளம் எப்ப வரும்ணு கேக்குறீங்களா..?

ஹி... ஹி...

--------------
இப்ப பாப்பிக்கிட்டே கேட்ட சில கேள்விகளுக்கு மட்டும் பதில். அவங்க பதிலும் அதுவாத்தான் இருக்குங்கிறதால..

கேள்வி 1 க்கு அவங்க வந்து பதில் சொல்வாங்க. நான் சொல்ற உண்மைய நீங்க நம்பமாட்டீங்க.

கேள்வி 2 க்கும் அவங்களே பதில் சொல்லட்டும்.

3. காலையில தோசை, சட்னி (நான் சாப்பிடல), மதியம் சாதம், புளிக்குழம்பு, கீரை கடைசல் (அதுல சாதம் புளிக்குழம்பை இப்பத்தான் அரை மணி நேரத்துக்கு முன்னாடி சாப்பிட்டேன்.) இரவு சப்பாத்தி, சன்னா குருமா (அதை சரியான நேரத்துக்கு சாப்பிட்டேன்.)

கவின் கேள்விகளுக்கு பதில்:

1. தியேட்டரில் பார்த்த படம் பத்தி ஏற்கனவே மன்றத்தில எழுதினதா ஞாபகம். இந்திரலோகத்தில் அழகப்பனோ என்னவோ ஒரு படம். மாயாஜால்ல வேற ஏதோ ஒரு படத்துக்கு போய் டிக்கெட் கிடைக்காம இந்த இரண்டரை மணி நேர கொடுமையை அனுபவிச்சிட்டு வந்தோம்.

2. நூடுல்ஸ், சூப்

மேலும் சில பதிவுகள்