நான் ரெடி நீங்கள் அனைவரும் ரெடியா?

ஹாய் அறுசுவை தோழிகள் அனைவருக்கும் வணக்கம். நான்தான் பாப்பி, உங்கள் அனைவரிடமும் பேசுவதற்காக வந்து உள்ளேன் நான் ரெடி நீங்க ரெடியா எல்லோரும் எப்படி இருக்கிறீங்க?

பாப்பி நீங்க அறுசுவையைப் பார்த்து ஏதாவது சமைப்பீங்களா?

தினமும் 8 மணிக்கு தூங்கப் போகும் உங்களை இப்படி நடு சாமம் வரை முழிக்க வைத்துவிட்டாரா அட்மின்?நாளை வந்து பதில் சொல்லுங்க

நிறைய..

சமையல் விசயத்துல குறை சொல்ல முடியாத திறமை.. காரணம், அறுசுவையில யாரும் சமைக்கலாம் பகுதிக்காக கிட்டத்திட்ட 700, 800 குறிப்புகள் வரைக்கும் கலெக்ட் பண்ணினது பாப்பியும் பத்மாவும்தான். திருமதிகள் பைரோஜா, சுமதி திருநாவுக்கரசு, மங்கம்மா, காஞ்சனா ன்னு சமையல் ராணிகள் தயாரிப்புகளை பக்கத்துல இருந்து பார்த்து, கூட மாட உதவி செஞ்சு, அரிச்சுவடியை அங்க இருந்து ஆரம்பிச்சதால அஸ்திவாரம் கொஞ்சம் ஸ்ட்ராங்க்தான். அப்புறம் மாமியார் டீச்சர்கிட்டேவேற டெய்லி ட்யூசன் எடுத்துக்கிறதால first class வாங்குற அளவுக்கு திறமை வளர்ந்திருக்கு.

யாரும் சமைக்கலாமுக்காக கிட்டத்திட்ட ஒரு 50 ஐட்டம் செஞ்சு போட்டோ எடுத்து வச்சு இருக்காங்க. இன்னும் ஒண்ணுகூட வெளியிடல. அதுல நிறைய தயாரிப்புகள் அறுசுவையில மத்தவங்க கொடுத்திருக்கிற குறிப்புகளை வைச்சு செஞ்சதுதான்.

ஹாய் பாப்பி .. எப்படி இருக்கீங்க.. உங்க உடல் நலம் எல்லாம் எப்படி இருக்கு.. மதியம் வெளிய போயிட்டு வர்ரதுக்குள்ள இங்க ஒரே கலாட்டா :D
கேள்வி எல்லாம் பலமா ஜாலியா இருக்கு. உங்க ஸ்பெஷல் என்ன? மீண்டும் பேசுவோம்

"We judge ourselves by what we feel capable of doing, while others judge us by what we have already done."

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

பாபு அண்ண & அண்ணி எப்படி இருக்கிங்க. உங்க திருமண படம் (PHOTOS) பார்த்தேன். நல்லா இருந்தது. உங்க பெயர் இப்பதான் தெரியும்.
உங்க கிட்ட பேசுனது எனக்குரெம்ப சந்தோஷம்.
வாழ்த்துக்கள் பாபு அண்ணா & அண்ணி.

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

1. ஹாய் ஹேமா எப்படி இருக்குறீங்க? நீங்க நல்லா காமெடி பண்ணுவீங்கலாமே. பாபு சொல்லும்.(அறுசுவை காமெடி அரசியா?) புலானாய்வு ஜர்னலிஸ்ட் எல்லாம் அனுப்பி கண்டுபிடிக்கிற அளவுக்கு பெரிய காதல் கதை கிடையாது. நானே short and sweeta சொல்லிடுறேன். என் காதல் கதையை கேட்டா தப்பு இல்லை. நாங்க இரண்டு பேரும் முதல காதலிக்கவே இல்லை. எனக்கு அவங்கள ரொம்ப பிடிக்கும் அதே போல் அவுங்களுக்கும் என்ன ரொம்ப பிடிக்கும். எனக்கு மனசுல ஒரு ஆசை இருந்தது நான் பாபுவ விட்டு பிரியகூடாதுனு. அதுக்கூட எங்கள சேர்த்து வைத்திருக்கலாம். நவம்பர் 22 அன்றுதான் அவங்க முதலில் என்னை கல்யாண பண்ணிக்கலாமான்னு கேட்டாங்க(இதுலயும் ஓரே மாதிரியே யோசிச்சுயிருக்கோம்). நான் உடனே ஓகே என்று சொல்லிடேன். அதற்கு பிறகு நடந்த சம்பவங்கள் அனைத்தும் உங்களுக்கு நன்றாக தெரிந்திருக்கும். கல்யாணத்துக்கு பிறகு தான் தெரிந்தது இதான் காதல் என்று.

2. எல்லாமே நகைச்சுவையாகதான் இருக்கும் இப்போ எதுவும் ஞாபகம் இல்லை.

senbagababu

ஹாய் கவின், வானதி, பிரபாதாமு எப்படி இருக்குறீங்க? நீங்க கேட்ட கேள்விக்கு பாபுவே பதில் சொல்லிட்டு. அப்புறம் உங்கள பத்தி கொஞ்சம் சொல்லுங்க. உங்களோட பேச ரொம்ப சந்தோஷமா இருக்கு. ஆனா என்ன பேசுறது தெரியல.(முதல் தடவை என்பதால்)

senbagababu

ஹாய் இலா எப்படி இருக்குறீங்க? எனக்கு உடம்பு கொஞ்ச கொஞ்சமாக தேறிவருகிறது. உங்கள நான் போட்டோவில் பார்த்திருக்கிறேன். உங்களை எங்கோ பார்த்த ஞாபகம். உங்களிடம் பேசுவதில் சந்தோஷமாக இருக்கு.

senbagababu

எப்படி இருக்குறீங்க? உங்கள் ஆசை நிறைவேறிட்டா. உங்களிடம் பேசிவிட்டேன். உங்கள பத்தி கொஞ்சம் சொல்லுங்க? உங்களுக்கு எத்தனை குழந்தைகள். எப்படி போகுது லைஃப்.

senbagababu

பாப்பி நான் அறுசுவைக்கு கொஞ்சம் புதுசு, யாரும் லைனில் இல்லை போல. நீங்கள் இலாவைப் பார்த்து நினைத்ததைப்போல், நான் உங்களின் போட்டாவை கெட்டுகெதரில் பார்த்ததும் நினைத்தேன். என் கசின் காயத்ரி உங்களின் சாயலிலேயே இருப்பாள். நீங்கள் இந்தியாவில் எங்கே வசிக்கிறீர்கள்.
உத்தமி.

ஹாய் ஸ்வீட்டி பாப்பி எப்படி இருக்கிங்க பா? கெட் டூ கெதரில் பார்த்தீங்கலே ஞாபகம் இருக்கா?உங்களை நேரில் பார்த்த்தில் மகிழ்ச்சி யா இருக்குப்பா.ரொம்ப நல்லா பேசினீங்க.இனிமேல் தினமும் எங்களூடன் பேசிவீங்கதானே.

அன்புதோழி
ஜெயலஷ்மிசுதர்சன்

மேலும் சில பதிவுகள்