நான் ரெடி நீங்கள் அனைவரும் ரெடியா?

ஹாய் அறுசுவை தோழிகள் அனைவருக்கும் வணக்கம். நான்தான் பாப்பி, உங்கள் அனைவரிடமும் பேசுவதற்காக வந்து உள்ளேன் நான் ரெடி நீங்க ரெடியா எல்லோரும் எப்படி இருக்கிறீங்க?

ஹாய் அண்ணி. எப்டி இருக்கிங்க நீங்க அருசுவைக்கு வந்ததுல ரெம்ப சந்தோஷம். எனக்கு ஒரு பையன் இருக்கான் ஐந்து மாத குழந்தை. மதியமே உஙலோடு பேச நினைதேன் ஆனால் உங்க மருமகன் விட மாட்டேன்கிரான் அவனை தூக்கி வசுட்டே இருக்க சொல்ரான் அதான் அண்ணி இபோதான் டைம் கிடைதது. உங்கல அண்ணினு கூப்டலாமா?

துரை வந்தால் பின்னாடியே துரைசானி வருவாங்கன்னு சொல்லுவாங்க.
இங்க பாருங்கப்பா துரைசானி வந்ததும் இந்த துரை (பாபுதான்) டபக் டபக்ன்னு வந்து பதில் கொடுக்கறத.

பாப்பி நல்லவேலை செய்தீங்க. உங்க புண்ணியத்தில நாங்களும் எங்க தலைய அடிக்கடி அறுசுவையிலே கதைக்கிறதை பார்ப்போம். இல்லேன்னா தம்பியை தேடி இல்ல அலையணும். கூவிக்கூவி கூப்பிட்டாதான் தம்பி வருவார்.

பாப்பி நீங்க அறுசுவைக்கு வருவது எங்களுக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு. வாங்க வந்து ஜோதியில் கலந்துடுங்க.

அன்புடன்
ஜெயந்தி மாமி

ஹாய் உத்தமி உங்க பெயர் எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு. நீங்க எல்லாரும் என்ன பார்த்திருக்கிறிங்க. நா சில பேர மட்டும் தான் பார்த்திருக்கிறேன். எப்படி இருக்குறீங்க? உங்களோட உன்மையான பெயர் இதுதானா? இல்ல அறுசுவைக்காக சும்மா register பண்ண பெயரா?

senbagababu

ஹாய் ஜெயலெஷ்மி உங்களதான் காணுமுனு நினைச்சிட்டு இருந்தேன். உங்கள எல்லாரையும் என்னால மறக்க முடியுமா. உங்க குழந்தைகள் எப்படி இருக்காங்க. பொன்மொழிகள் த்ரெட்டில் நல்லா கலக்குறீங்க.

senbagababu

நலமா? உங்க திருமணத்திற்கு வாழ்த்துக்கள்.

ஹாய் பாப்பி, ரொம்ப நன்றிபா. நாங்க நல்லா இருக்கோம் பா. நான் நேற்றுன் ஃபுல்லா அருசுவைக்கு வரல பா.கொஞசம் பிசி. இன்ன்க்கி தான் உங்க பதிவு பர்ர்த்தேன் பா.அதான் உடனே பதிவு போட்டேன்.என்ன சமையல் எல்லாம் செய்துட்டீங்களா?

மாமி எப்படி இருக்குறீங்க? அவங்க கொஞ்சம் பிசியா இருக்காங்க. அதான் நா வந்துட்டேன். மாமி நா கெட் டூ கெதரில் எல்லோரையும் பார்த்த பிறகு நான் அறுசுவையில் பேசனும்னு நினைச்சேன் ஆனா முடியல. அதான் இப்ப வந்துட்டேன்ல. உங்க மகள் மற்றும் மகன் எப்படி இருக்காங்க? சார் ரொம்ப அமைதியான டைப்பா மாமி.

senbagababu

பாப்பி மகனும் மகளும் நலம்.
எங்க வீட்டு சார் ரொம்ப அமைதி:)-. ஆனா வாயைத்திறந்தா மூடவே மாட்டார். அடுத்த முறை சென்னை வரும்போது நீங்களும் பாபுவும் கண்டிப்பாக வீட்டுக்கு வாங்க. வந்து பாருங்க எப்படி பேசராருன்னு.

அன்புடன்
ஜெயந்தி மாமி

ஜெயா உங்களிடம் பிடிச்சது இந்த வார்த்தை (பா) தான்:-) இப்போதுதான் சமைத்து முடித்துவிட்டு வந்தேன். வந்து பார்த்தால் உங்கள் போஸ்டிங். உடனே பதில் போட வந்துட்டேன். நீங்க சமைத்து முடித்து விட்டீர்களா. என்ன சமையல்?

senbagababu

பாப்பி, நான் நன்றாக இருக்கிறேன், சிட்னி வெய்யிலில் காய்ந்து கொண்டு எங்கும் நகரமுடியாமல் கணிணி முன் இருக்கிறேன்.
என் பெயரே உத்தமி தான். நிறைய இடத்தில் என் காலை வாரிவிட்ட பெயரும் கூட.
முன்பெல்லாம் யாரும் பெயர் கேட்டால் கூட சொல்லக் கஷ்டமாகயிருக்கும்.
என் ஹஸ்ஸே, திருமணத்தப்போ இன்விடேசனில் அடிக்க வேறு பெயர் இருந்தால் சொல்லச்சொல்லி கேட்டிருந்தார் என்றால், பார்த்துக் கொள்ளுங்களேன்.

உத்தமி.

மேலும் சில பதிவுகள்