நான் ரெடி நீங்கள் அனைவரும் ரெடியா?

ஹாய் அறுசுவை தோழிகள் அனைவருக்கும் வணக்கம். நான்தான் பாப்பி, உங்கள் அனைவரிடமும் பேசுவதற்காக வந்து உள்ளேன் நான் ரெடி நீங்க ரெடியா எல்லோரும் எப்படி இருக்கிறீங்க?

ஹாய் அப்ப்டியா பா,நானும் சமையல் முடிச்சிடேன் பா. எங்க வீட்டு சமையல்... கத்தரிக்காய் சாம்பார்,உருளைகிழங்கு வறுவல்,பீன்ஸ் பொரியல் ,ரசம்,அப்பள்ம் பா. நீங்க என்ன செய்தீங்க?

மாமி நாங்க சென்னை வரும்போது கண்டிப்பாக வருகிறோம். எல்லாரையும் கேட்டதாக சொல்லவும்.

senbagababu

ஹாய் எப்படிபா இருக்கீங்க?இப்ப சென்னையில் இருக்கீங்களா?இல்லை ஊரில் இருக்கீங்களா.எந்த ஊர் ரொம்ப பிடிச்சிருக்கு.எப்படியும் ஊர் தான் பிடிச்சிருக்குன்னு சொல்ல போறீங்க தானே!

அப்புறம் எதுக்கு ஒரு கேள்வியை கேட்டு,அதற்கு நீங்களே பதிலும் சொல்றீங்கன்னு நீங்க நினைப்பது தெரியுது.இருந்தாலும் உங்ககிட்ட இருந்து எப்படிப்பட்ட பதில் வருதுன்னு ஒரு ஆசை.

உத்தமி உங்க நிலமைதான் எனக்கும். என் பெயரை வெளிய சொல்லவே பிடிக்காது. எங்க வீட்ல இரண்டு பெயரையும் நல்ல வைக்கல(பாப்பி & ஜெண்பகவள்ளி). எங்கள் திருமணம் போது பாபு உன் பெயரை மாத்திடலாம என்று கேட்டு காமெடி பண்ணிச்சு. ஸ்கூல் படிக்கறப்போ எங்க அப்பாட்ட பெயர மாத்துங்கன்னு சொன்ன அப்பா இது பாட்டி பெயர் மாத்தவேண்டா என்று சொல்லிட்டாங்க. என்ன பண்ணறது குழந்தையாக இருக்கும் போதே பெயர் வச்சிட்டாங்களே(ஒண்ணும் பண்ணமுடியாது).

senbagababu

ஹாய் பாப்பி நீங்க வந்ததில் ரொம்ப ஹேப்பி(எப்படி எங்க திறமை).நான் ஊர்ல இருந்து வந்தவுடனே அறுசுவைக்கு நீங்க வந்து பேசணும் நான் சொன்னதை, மறக்காம, பேசிட்டீங்களே(ஓகே ஒகே முறைக்காதீங்க).
நான் உங்களை எந்த கேள்வியும் கேட்க போரதில்லை,நான் ரொம்ப நல்ல பிள்ளையாக்கும்.
ஐயய்யோ கேட்க மறந்துட்டேன் எப்படி இருகீங்க.

ஹாய் சுகன்யா எப்படி இருகீங்க, பொண்ணு நல்லா இருக்க்காங்களா.

ஹாய் ஜெயா எங்க வீட்ல வெண்டைக்காய் சாம்பார், கீரை மசியல், வாழைக்காய் வறுவல்.

உங்கள் வாழ்த்துக்கு ரொம்ப நன்றி. கீதா லெஷ்மி எப்படி இருக்கிறீங்க? நலமா,

senbagababu

சுகன்யா எப்படி இருக்குறீங்க? நான் நலம். நாகையில் தான் இருக்கிறோம். எங்க இரண்டு பேருக்கும் ஒரே ஊர் தான். எனக்கு ரொம்ப பிடிச்ச ஊர் சென்னை அல்லது நாகையானு கேட்ட கண்டிப்ப எனக்கு சென்னைதான் பிடிக்கும்.

கவி நான் நல்லா இருக்கிறேன். நீங்க எப்படி இருக்குறீங்க? எனக்கு உங்களுடன் பேசுவது ரொம்ப சந்தோஷம். ஹாய் நான் சாப்பிட போகிறேன் பிறகு அனைவரிடம் பேசுகிறேன். bye.

senbagababu

நலம் பாப்பி!
ரொம்ப சந்தோஷம் உங்ககிட்டே பேசுவதில்.அண்ணாகிட்டே நீங்க விட்டுக்கொடுத்து வாழ்வது ரொம்பவும் பாராட்டவேண்டிய விஷயம். வாழ்த்துக்கள்

பாப்பிஉங்க வீட்டு சமையலும் சூப்பர்தான். சாப்பிட்டிங்களாப் பா? நாங்க இப்போதுதான் சாப்பிட்டோம்ப.

ஹாய் பாப்பி,
நலமா? இந்த இழை முழுவதையும் படித்துவிட்டுத்தான் பதிவு போடுகிறேன். உங்களிடம் கேட்கப்பட்டிருக்கிற கேள்விக்கெல்லாம் வேறு யாரோ பதில் போட்டிருக்கிறாங்களே. ;-) இந்த இழைக்கு நீங்கதான் அட்மின். சொல்லி வைங்க.
நான் முதலில் உங்கள் பெயர் பாப்பி என்று நினைத்திருந்தேன். பிறகுதான் Poppy என்று தெரிந்தது.
உங்கள் விநாயகர் அழகாக இருக்கிறார். நெல்லிக்காய், சுண்டங்காய், முந்திரிப் பருப்பு என்று குறிப்பும் ரசிக்கிறமாதிரி எழுதியிருந்தீர்கள். செய்து பார்க்க ஆசை. பிறகு விநாயகரை என்ன செய்வது என்று யோசித்து விட்டுவிட்டேன். அங்கு பின்னூட்டம் கொடுத்த எல்லோருக்குமே உங்கள் அட்மின்தான் பதில் போட்டிருக்கிறார். ;-(
உங்கள் ஊரில் கஜு காய்க்கிற மாமரங்கள் இருக்கிறதாமே? உண்மையா? நான் மாங்காய் காய்க்கும் மாமரம்தான் கண்டிருக்கிறேன். ;-) புகைப் படங்களிலெல்லாம் அழகாக இருக்கிறீர்கள். கெட் டுகெதர் படம் ஸ்வீட்.
நான் உறங்கப் போகிறேன். மீண்டும் நாளை சந்திப்போம். நல்லிரவு.
அன்புடன்
இமா

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்