நான் ரெடி நீங்கள் அனைவரும் ரெடியா?

ஹாய் அறுசுவை தோழிகள் அனைவருக்கும் வணக்கம். நான்தான் பாப்பி, உங்கள் அனைவரிடமும் பேசுவதற்காக வந்து உள்ளேன் நான் ரெடி நீங்க ரெடியா எல்லோரும் எப்படி இருக்கிறீங்க?

இது என்ன திடீர் சர்ப்ரைஸ். ரொம்ப சந்தோஷம் நீங்க எல்லோருடனும் பேச வந்தது. தொடர்ந்து வாங்க நாம பேசுவோம். உடம்பு இப்போ பரவாயில்லையா. இப்போதான் பார்த்தேன் இந்த த்ரெட்டை. அறுசுவை 2 நாளா ரொம்ப மக்கர். அதனால் எதையும் பார்க்க முடிவதில்லை. பாபு அண்ணா உங்களை ரொம்ப பெருமையா சொல்லியிருக்கார். என்ன பாப்பி நிஜமாவே ரொம்ப சந்தோஷம்தானே. கெட் டூ கெதருக்கு பிறகு உங்களுடன் பேசவே முடியவில்லை. விரைவில் பேசுவேன்.

அப்புறம் செண்பகா என்ற அழகாத்தானெ இருக்கு. தாம்தூம் ஹீரோயினுக்கு படத்தில் பெயர் செண்பா. அதன் பிறகு அந்த பெயர் பேமஸ் ஆயிட்டு பாப்பி. அதனால் இனிமேல் செண்பா.

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

நலமா?திருமண போட்டோவிலும்,கெட்டுகெதர் போட்டோவிலும் பார்த்திருக்கிறேன்,அழகான அமைதியான பொண்ணாக தெரியறீங்க.எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும்.பேசவும் ஆசை.ஒரு நாள் போன் பண்ணி உங்களுடன் பேச நினைத்திருக்கிறேன்.,திருமண லின்க்கில் உள்ள நம்பர் தானே.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ஹாய் செண்பா (ம் நல்லாதான் இருக்கு இப்படி கூப்பிட்டாலும்) எப்படிப்பா இருக்கீங்க.என் தோழி ஒருத்தி பேர் கூட செண்பகவள்ளி தான். என்ன எல்லாரும் கேள்வி மேல கேள்வி கேட்குறாங்களா? (என்ன கேட்டு என்ன பண்ண எல்லாத்துக்கும் அட்மின் தான பதில் சொல்றார்)

அப்புறம் செண்பா என்ன நீங்க இவ்வளவு அமைதியான பொண்ணா இருக்கீங்க (அதான் உங்க ஆள் உங்களை நல்லா கலாய்க்கிறார்).

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.

ஹாய் அண்ணி எப்படி இருக்கீங்க?எங்க அண்ணன் என்ன சொல்றார்?நீங்க நல்ல நாள் பார்த்து பேச வந்துட்டீங்க,ஆனா இன்னிக்கு என்னால பேசவே முடியாத நாள்,நானும் காலையில் இருந்து ஒரு பதிவு போட தவிக்கிறேன்,ஆனால் இப்பதான் முடிஞ்சது,எல்லாரும் உங்ககிட்ட கேள்வி கேட்டால்,அண்ணா வந்து பதில் தராங்க,பயப்படாதீங்க நான் கேள்வி எல்லாம் கேட்க மாட்டேன்,முதல்ல நான் என்னை அறிமுகம் செய்துகிறேன்,

என் பெயர் ரேணுகா தேவி,எல்லாரும் ரேணு என்று கூப்பிடுவாங்க,என் ஊர் திருச்சி,ஆனால் இப்ப இருக்கிறது அபுதாபியில்,எனக்கு 3 வயசில் கோகுல் என்று ஒரு பையன் இருக்கிறான்,அறுசுவை ஆரம்பத்தில் (பழையதளம்)இருந்து நான் பார்த்து வருகிறேன்,ஆனால் இப்பொழுது தான் எல்லாருடனும் பேசுகிறேன்,என் மகனை பள்ளியில் சேர்த்த பின்னர் எல்லாரையும் ஒரு வழி பன்னலாம் என்றே எனது இப்போதைய லட்சியம்,நான் மீண்டும் ஞாயிறு வருகிறேன்,அது வரை படிப்பேன் எல்லார் பதிவுகளையும்,இனி நீங்க பதில் சொல்லுங்க

என்றும் அன்புடன்
ரேணுகா
Sacrifice anything for Love,But don't sacrifice Love for anything...

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

எப்படியிருக்கிங்க.என்னை ஞாபகமிருக்கா??எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்.ஹேமா உங்களை அக்கான்னு கூப்பிடும் போது அவங்க எப்படி உங்களூக்கு எப்படி மருமகளானாங்க.
எனக்கு ஒன்னுமே புரியல ஹேமாவை மருமகள்ன்னு சொல்றீங்க,தனீஷா என் பொண்ணை தங்கச்சின்னு சொல்றாங்க.ஐயோ எனக்கு தலை சுத்துது.என்னை யாராவது காப்பாத்துங்கோ....

வருக, வருக,

இது எப்படி இருக்கு? உங்க வீட்டுலயே உங்களை நாங்க வரவேற்பது:)

அது இருக்கட்டும், நீங்கள் அரட்டையில் கலக்க வரும்போது சாருக்கு ஏன் இவ்வளவு டென்ஷன்?

சரி பாப்பி, அடிக்கடி கலந்து கொள்ளுங்கள், எஙகள் பதிவுகளைப் பற்றிய பின்னூட்டம் எல்லாம் உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம், சரியா

அன்புடன்

சீதாலஷ்மி

அன்புடன்

சீதாலஷ்மி

வீட்டில் எல்லோரும் எப்படி இருக்காங்க? நலமா, கெட் டூ கெதரில் உங்கள் அனைவரையும் பார்த்ததில் ரொம்ப சந்தோஷம். நாம் கண்டிப்பாக உங்கள் பதிவுகளை பார்த்து விட்டு பின்னூட்டம் அனுப்புகிறேன். சாருக்கு டென்ஷன் ஒன்றும் இல்லை சும்மா கிண்டல் பண்ணாங்க மத்தபடி ஒன்றும் இல்லை. நான் தினமும் அறுசுவையை பார்ப்பேன் எல்லாரிடமும் பேச வேண்டும் என்று நினைப்பேன். அந்த ஆசை இப்போதான் பூர்த்தி ஆயிடுச்சு. இனி உங்களிடம் நிறைய பேசலாம். ஓகே தானே.

senbagababu

தனிஷா எப்படி இருக்கீங்க? உங்க குட்டி பாப்பா எப்படி இருக்கா? உங்களிடம் பேசும் போது முன்பே ரொம்ப நாள் பழகிய அனுபவம். நல்லா பேசினிங்க. ஊர் பயணம் எப்படி இருந்தது. ஊர விட்டு வரமனசே இல்லையா? அறுசுவை தோழிகளிடம் ரொம்ப பொலம்புனிங்களே. இப்போ எப்படி இருக்கு. குட்டி பாப்பாக்கு ரொம்ப கஷ்டமாக இருந்திருக்கும். இப்போ பரவாயில்லையா.(normal lifeக்கு வந்துட்டாலா).

senbagababu

என்ன ரொம்ப பிடிக்குமா எனக்கு சந்தோஷமா இருக்கு. உங்கள நான் பார்த்ததில்லை. எனக்கும் உங்களை பிடித்து விட்டது.

senbagababu

இமா நலமா? /நான் முதலில் உங்கள் பெயர் பாப்பி என்று நினைத்திருந்தேன். பிறகுதான் Poppy என்று தெரிந்தது/ நீங்கள் சொல்ல வந்தது என்ன வென்று புரிய வில்லை. என் பெயரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் டைப் செய்து இருக்கிறீர்கள் என்று மட்டும் புரிகிறது. /நெல்லிக்காய், சுண்டங்காய், முந்திரிப் பருப்பு என்று குறிப்பும் ரசிக்கிறமாதிரி எழுதியிருந்தீர்கள். செய்து பார்க்க ஆசை./ இந்த குறிப்பை நான் அனுப்பவில்லை.
//உங்கள் ஊரில் கஜு காய்க்கிற மாமரங்கள் இருக்கிறதாமே? உண்மையா? நான் மாங்காய் காய்க்கும் மாமரம்தான் கண்டிருக்கிறேன். ;-)//
இமா போட்டோவுக்கு போஸ் கூடுத்த புகைப் படங்களை பார்த்து விட்டு இப்படி கிண்டல் பண்ணலாமா. நான் அழகாக இருக்கிறேனா எனக்கு சந்தோஷம் தாங்க முடியல பா......ரொம்ப நன்றி.

senbagababu

மேலும் சில பதிவுகள்