நான் ரெடி நீங்கள் அனைவரும் ரெடியா?

ஹாய் அறுசுவை தோழிகள் அனைவருக்கும் வணக்கம். நான்தான் பாப்பி, உங்கள் அனைவரிடமும் பேசுவதற்காக வந்து உள்ளேன் நான் ரெடி நீங்க ரெடியா எல்லோரும் எப்படி இருக்கிறீங்க?

ஆன்லைனில் இருக்கீங்க போலிருக்கு. இன்னும் தூங்கலியா. என்னாலையும் மறக்க முடியல ரொம்ப இயல்பா நாம பேசிக் கொண்டு இருந்தத. குட்டி நல்லாயிருக்கா. நீங்களும் அவளும் இருந்த போட்டோ எல்லாம் செண்ட் பண்ணுகிறேன். ஊரில் எல்லோரையும் மிஸ் பண்ணுகிறேன் பாப்பி உட்பட. சாப்ட்டாச்சா

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

பாப்பி எங்கள் வீட்டில் அனைவரும் என்னை ஆசியாமா என்றுதான் அழைப்பார்கள்,அதனால் நீயும் அவ்வாறு அழைப்பது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது.நான் என் பேமிலி போட்டோ அனுப்பிருந்தேனே .பார்க்கலையா?
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ரேனுகா நலமா?
//உங்ககிட்ட கேள்வி கேட்டால்,அண்ணா வந்து பதில் தராங்க,//
என்னப்பா நான் தூங்க போய்ட்டேன் அதான் அவங்க பதில் கொடுத்தாங்க. நான் எத்தன பதில் கொடுத்திருக்கேன் பாருங்க. உங்கள் பையன் கோகுலை நான் போட்டோவில் பார்த்தேன். எத்தனை அழகு. எனக்கு கோகுலை பார்த்ததும் முத்தம் கொடுக்கனும் போல இருக்கு. எனக்கு பதிலாக என் சார்பில் நீங்கள் கொடுத்து விடுங்கள். எல்லாரையும் ஒரு வழி பண்ணுங்க வாங்க ரேனுகா.(என்னை தவிற மற்றவர்களைதானே சொன்னிங்க):-)

உமா நலமா? என்னை செண்பா என்றே கூப்பிடுங்க. உங்கள் தோழி எப்படி இருக்காங்க நா கேட்டதாக சொல்லுங்க. நான் கொஞ்சம் அமைதியான பொண்ணுதான்(எனக்கு கோபமும் வரும்). நீங்க எப்படி.

மேனகா நல்லா இருக்கேன். ஞாபகம் இருக்கு எப்படி மறப்பேன். என்ன உண்மை உங்களுக்கு தெரியனும்
//ஹேமா உங்களை அக்கான்னு கூப்பிடும் போது அவங்க எப்படி உங்களூக்கு எப்படி மருமகளானாங்க.//
பாபுவை மாமா என்று கூப்பிட்டால். எனக்கு மருமகள் தானே புரியுதா. என்னை இப்பொதானே அக்கான்னு கூப்பிடுறாங்க. பாபுவை ரொம்ப நாளாக கூப்பிடுறாங்க அதான் எனக்கு மருமகளாக ஆய்ட்டாங்க.

senbagababu

தனிஷா பதிவு கொஞ்சம் தாமதமாக தான் வரும் கோபம் வேண்டாம் நான் ஆன்லைனில் தான் இருக்கீறேன். தூக்கம் வரலை. போட்டோஸ் அனுப்புங்க பார்ப்பதற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன். இனி இந்தியாவுக்கு எப்ப வருவிங்க.

senbagababu

இப்போதான் உங்கள் போட்டோவை பார்த்தேன். வயதே தெரியவில்லை சின்ன பொண்ணு மாதிரி இருக்கீங்க. நல்லா இருக்கீங்கமா?

senbagababu

பதிவு லேட்டான தப்பில்லை. போட்டோஸ் அனுப்புகிறேன். நீங்களும் பாபு அண்ணாவும் இருக்கும் போட்டோ சூப்பரா வந்திருக்கு. அப்ராகிட்ட இது யாருனு கேட்டா மாமா, மாமி என்கிறாள் (என் அண்ணியும் உங்களைப் போன்றுதான் இருப்பார்) இந்தியாவுக்கு இனி வீடு கட்டி முடிஞ்சது வருவேன்ப்பா. இன்னைக்கு டெமாலிஷ் பண்ணியிருக்காங்க. இன்னும் ஒரு வாரத்தில் வேலை ஸ்டார்ட் ஆயிடும். அதுவரை இங்குதான் பாப்பி. என்ன அறுசுவை வேலையில் தூக்கம் வரலியா பாப்பிக்கு

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

பாப்பி கொஞ்ச போட்டோஸ் இன்னைக்கு அனுப்பியிருக்கேன். மீதி போட்டோ நாளைக்கு அனுப்புகிறேன் சரியா

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

ஹல்லோ பாப்பி நலமா. சகோதரர் பாபு எப்படி இருக்கிறார். உங்களின் பதிவுகளைப் படித்துக் கொண்டிருக்கிறேன். இது வரை ஏன் மவுனம் காத்தீர்கள். ஆங்கிலத்தில் தளம் வெளியிடும் பணியில் உத்வேகமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறீர்களா? பல இடங்களிலிருந்து வாசகர்கள் பங்கேற்பது பற்றிய உங்கள் பார்வை குறித்து அறிய ஆவலாய் இருக்கிறேன்.

If God be with us what could be against us

If God be with us what could be against us

எனக்கு 42 வயது ஆகிறது. வயது தெரியலைன்னு சும்மானாச்சுக்கும் சொல்லி வைக்கிறாய்.எனக்கு பதினெட்டு வயதில் திருமணம் ஆகி இருந்தால் உன்னைப்போல் ஒரு பெண் இருந்திருப்பாள் தானே.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ஹாய் செண்பகா எப்படி இருக்கீங்க? தம்பி நல்லா இருக்காரா? இப்படி திடீரென்று பிரசன்னமாகி எங்களை மகிழ்ச்சியில் திக்குமுக்காடச் செய்துவிட்டீர்கள்!இதை நான் முன்பே எதிர்பார்த்திருந்தாலும் கொஞ்சம்கூட இன்று எதிர்பார்க்காதது இன்ப அதிர்ச்சியாக இருந்தது. அறுசுவையில் இருக்கும் உங்கள் புகைப்படங்கள் அனைத்தும் பார்த்திருக்கின்றேன் ரொம்ப அழகாக இருக்கீங்க. இப்படி உங்களோடு பேசுவது மிகவும் சந்தோசமாய் உள்ளது. என்னைப் பற்றிய அறிமுகம் உங்களுக்கு வேண்டாம் தானே,மற்ற சகோதரிகளும் உங்களுடன் ஆவலோடு பேசிக்கொண்டிருப்பதும் மகிழ்ச்சியைத் தருகின்றது. ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னால் ஒரு பெண் இருப்பதைப் போல், நீங்க உங்கள் கணவரின் வெற்றிக்கு உற்றத்துணையாய் இருந்து வருவது மிகவும் பாராட்டப்பட வேண்டிய விசயம் உங்களை நினைத்தால் ரொம்ப பெருமையாக உள்ளது. இவ்வளவு காலம் திரை மறைவில் அறுசுவையின் வளர்ச்சிக்கு பாடுபட்ட நீங்கள் இனி இவ்வாறே வெளிப்படையாக வந்து நமது தளத்திற்கு மேலும் பெருமைச் சேர்க்க வேண்டும் என்பது என் அன்பு வேண்டுகோள். அறுசுவையில் மட்டுமல்லாமல் உங்கள் இல்லற வாழ்க்கையிலும் நீங்கள் எண்ணிய காரியங்கள் அனைத்தும் கைகூடிவர எனது வாழ்த்துக்களும் ஆசீரும் என்றும் உண்டு.நன்றி,மீண்டும் சந்திப்போம்.

மேலும் சில பதிவுகள்