கேரட் கீர்

தேதி: January 30, 2009

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கேரட் - கால் கிலோ,
பால் - அரை லிட்டர்,
சர்க்கரை - 300 கிராம்,
ஏலக்காய் - 4,
முந்திரி - 10,
பாதாம் - 5.


 

கேரட்டை தோல் சீவி, சிறு துண்டுகளாக நறுக்கவும். சிறிது தண்ணீர் சேர்த்து கேரட்டை வேக வைக்கவும். வெந்ததும் மிக்ஸியில் போட்டு நன்கு அரைக்கவும்.
பாதாம், முந்திரியை நைசாக அரைத்து வைக்கவும்.பாலை அடுப்பில் வைத்து காய்ச்சவும். சர்க்கரையை சேர்த்து கலக்கவும்.
சர்க்கரை கரைந்து, பால் கொதிக்கும் போது அரைத்த கேரட், பாதாம், முந்திரி சேர்த்து கலக்கவும்.
ஏலக்காயை தூளாக்கி சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விட்டு இறக்கவும்.
பாதாம் கீரை போலவே சுவையான கேரட் கீர் ரெடி.


மேலும் சில குறிப்புகள்