தேங்காய்பால் ஜாமூன்

தேதி: January 30, 2009

பரிமாறும் அளவு: 2 நபர்களுக்கு.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (1 vote)

 

பாசிப்பருப்பு - 200 கிராம்,
புழுங்கலரிசி - 100 கிராம்,
சர்க்கரை - 150 கிராம்,
தேங்காய் - 1,
ஏலக்காய் - 4,
உப்பு - 1 சிட்டிகை,
எண்ணெய் - சுட தேவையான அளவு.


 

தேங்காயை துருவி கெட்டியாக பால் எடுத்து வைக்கவும்.
ஏலக்காயை பொடி செய்யவும்.
சர்க்கரை, தேங்காய் பால், ஏலக்காய் சேர்த்து கலக்கி வைக்கவும்.
அரிசியும் பாசிப்பருப்பையும் ஒன்றாக 2 மணி நேரம் ஊற வைத்து, உப்பு சேர்த்து கெட்டியாக, நைசாக அரைக்கவும்.
அரைத்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
பொரித்த உருண்டைகளை தேங்காய் பாலில் 1 மணி நேரம் ஊற வைத்து பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்