சௌசௌ துவையல்

தேதி: January 30, 2009

பரிமாறும் அளவு: 2 நபர்களுக்கு.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சௌசௌ - 1,
பச்சை மிளகாய் - 3,
தேங்காய் - 1 மேசைக்கரண்டி,
புளி - ஒரு நெல்லிக்காய் அளவு,
கடலைப்பருப்பு - 1 மேசைக்கரண்டி,
உளுத்தம் பருப்பு - 1 மேசைக்கரண்டி,
கறிவேப்பிலை - சிறிது,
உப்பு - தேவையான அளவு.
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி.


 

சௌசௌவை தோல் சீவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பை போட்டு சிவந்தவுடன் பச்சை மிளகாய், சௌசௌ சேர்த்து வதக்கவும்.
சௌசௌ வதங்கியவுடன் புளி, தேங்காய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
எல்லாம் நன்கு வதங்கியபின் இறக்கி ஆற வைக்கவும்.
ஆறியபின் உப்பு சேர்த்து கரகரப்பாக அரைக்கவும்.


சாதம், இட்லி, தோசைக்கு நன்றாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்