குழந்தைகள் எளிதில் செய்யக்கூடிய கிஃப்ட் பாக்ஸ்

தேதி: January 31, 2009

4
Average: 3.3 (3 votes)

யாரும் சமைக்கலாம் பகுதியின் மூலம் குழந்தைகளுக்கான உணவு குறிப்புகள் வழங்கி கொண்டிருக்கும் திருமதி. கீதா ஆச்சல் அவர்கள் குழந்தைகள் எளிதில் செய்யக்கூடிய கிப்ட் பாக்ஸின் செய்முறையை அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்டியுள்ளார்.

 

கலர் சார்ட் சீட்(Color Chart Sheet) – 1
ஸ்டாப்ளர்(Staplers)
ஸ்கேல், கத்திரிக்கோல்(Scale & Scissors)
அலங்கரிக்கும் ரிப்பன் - 1
கிஃப்ட் பேப்பர் – 1 சீட்
கம்

 

கிஃப்ட் பாக்ஸ் செய்ய தேவைப்படும் அனைத்து பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
முதலில் தேவையான அளவு சார்ட் பேப்பரை நறுக்கி எடுத்துக் கொள்ளவும். இங்கே படத்தில் கொடுத்திற்கும் சார்ட் பேப்பரின் அளவு 36 செ.மீ x 28 செ.மீ. நான்கு மூலை பகுதிகளிலும் 10 செ.மீ அளந்து கோடு போட்டுக் கொள்ளவும். ஒவ்வொரு ஓரங்களிலிருந்து பார்த்தாலும் 10 செ.மீ இடைவெளி இருக்க வேண்டும்.
படத்தில் காண்பித்து உள்ளது போல் இடது மற்றும் வலதுப்புறத்தில் 10 செ.மீ அளவு எடுத்து கோடு போட்டிருக்கும் பகுதியை தவிர நடுவில் இருக்கும் பகுதியை நறுக்கி விடவும்.
பிறகு சார்ட்டின் ஓவ்வொரு பக்கத்தினையும் ஸ்கேலினை வைத்து உள்நோக்கி மடித்து கொள்ளவும். மடிப்பு தெரிவதற்காகவே இப்படி மடக்க வேண்டும்.
சார்ட்டின் நடுப்பகுதி நறுக்கப்பட்டிருக்கும் பக்கத்தினை எடுத்துக் கொண்டு அதன் நறுக்கிய நடுப்பகுதியை மையமாக வைத்து உள்நோக்கி மடித்து 10 செ.மீ அளவில் இருக்கும் மற்ற இரண்டு துண்டுகளையும் அதன் பின்புறமாக வைத்து மடித்துக் கொள்ளவும்.
மடித்த பகுதியை இணைத்த இடத்தின் மேல் புறம் ஸ்டாப்ளர் போட்டுக் கொள்ளவும். இதைப் போல் மற்றொரு பக்கத்தினையும் மடித்து ஸ்டாப்ளர் போட்டுக் கொள்ளவும்.
இப்பொழுது கிஃப்ட் பாக்ஸின் ஒரு பகுதி தயாராக உள்ளது
இதுப் போல் மற்றொரு பாக்ஸையும் செய்து கொள்ளவும். மேல் மூடி செய்யும் பொழுது செய்து வைத்திருக்கும் பாக்ஸை விட ஒரு செ.மீ அளவில்(10 – 1 = 9 செ.மீட்டர்) குறைத்து வைத்து கொள்ளவும். அப்பொழுது தான் எளிதில் மூட முடியும்.
பெரிய அளவில் உள்ள பாக்ஸை அடியில் வைத்து அதன் மேல் சிறிய அளவில் உள்ள பாக்ஸை வைத்து மூடி ரிப்பனை வைத்து அதன் மேல் கட்டி அலங்கரிக்கவும்.
இந்த கிஃப்ட் பாக்ஸை மேலும் அலங்கரிக்க அதன் மேல் கிப்ட் பேப்பர் மற்றும் வர்ண தாள்களை ஒட்டி அதன் மேல் ரிப்பனை கட்டி அலங்கரிக்கலாம். இப்பொழுது எளிதில் செய்யக்கூடிய கிஃப்ட் பாக்ஸ் தயார்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

மேடம் சமையல்ன்னாலும் அசத்தறீங்க கைவினை பொருள்னாலும் அசத்தறீங்க ம்...ம்... செய்யுங்க செய்யுங்க இப்படியெல்லாம் செய்யறத பார்த்தாவது கத்துக்கறேன்.

கீதா, சுலபமாக விளங்கிக் கொள்ளுகிறமாதிரி எழுதியிருக்கிறீர்கள். படங்களும் அழகாக இருக்கின்றன. ;-)
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

ப்ரியா மற்றும் இமா அவர்களுக்கு,
மிகவும் நன்றி.
அன்புடன்
கீதா ஆச்சல்

--

//இந்த செய்முறையை பார்த்து திருமதி. இமா அவர்கள் செய்த கிஃப்ட் பாக்ஸின் படம்// இப்போ இங்கே இல்லாததால்... அறுசுவை க்ளோஸ்ட் க்ரூப்பில் இன்று பகிர்ந்திருக்கிறேன். ;)

‍- இமா க்றிஸ்

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta