குட்டி பன் சாண்ட்விச்

தேதி: January 31, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

குட்டி பன் - 12
முட்டை - 3
மட்டன் கீமா - 50 கிராம் (சுருட்டியது)
உப்பு தூள் - அரை தேக்கரண்டி
மிளகு தூள் - ஒரு தேக்கரண்டி
பட்டர் - பன் பொரிக்க தேவையான அளவு
எண்ணெய் - முட்டை பொரிக்க தேவையான அளவு


 

கீமாவை கழுவி சுத்தம் செய்து கால் தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள், கால் தேக்கரண்டி உப்பு சேர்த்து கால் டம்ளர் தண்ணீர் ஊற்றி வேக வைத்து நன்கு சுருட்டி வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி சுருட்டி வைத்திருக்கும் கீமா, மிளகு தூள், உப்பு சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும். முட்டை நன்கு கீமாவுடன் சேரும்படி அடிக்கவும்.
குட்டி பன்னை இரண்டாக நறுக்கி அதில் லேசாக பட்டர் தடவி பேனில் போட்டு கருகவிடாமல் சிவக்க டோஸ்ட் செய்து எடுத்துக் கொள்ளவும்.
அடித்து வைத்திருக்கும் முட்டையை குட்டி குட்டியாக பன் அளவிற்கு ஊற்றி மேலே பட்டர் மற்றும் எண்ணெய் கலந்து ஊற்றி பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
குட்டி பன் சாண்ட்விச் செய்ய பொரித்த முட்டை மற்றும் டோஸ்ட் செய்த குட்டி பன் தயார்.
குட்டி பன்னின் இரு புறங்களிலும் புதினா சட்னி அல்லது கெட்சப் தடவி நடுவில் முட்டையை வைத்து பரிமாறவும். சுவையான குட்டி பன் சாண்ட்விச் ரெடி. இதில் கீமாவிற்கு பதில் சிக்கனும் சேர்க்கலாம்.
அறுசுவையில் 500 சமையல் குறிப்புகள் மற்றும் பயனுள்ள வீட்டு உபயோகக் குறிப்புகள் கொடுத்து தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ள <b> திருமதி. ஜலீலா </b> அவர்கள் நேயர்களுக்காக செய்து காட்டியுள்ள குறிப்பு இது.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ஹாய் ஜலீலா,
பன் பார்க்க ஆசையாக இருக்கிறது. (உங்கள் குட்டீஸையும் தான்.) உங்கள் பிள்ளைகள் லக்கி. விதம் விதமாகச் சாப்பிடக் கொடுக்கிறீர்கள். ;-) சந்தர்ப்பம் கிடைக்கிறபோது நானும் செய்து பார்க்கிறேன்.
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

பார்க்கவே ஆசையாக உள்ளது, இன்று செய்துவிட்டு சொல்கிறேன். சாஸ் வகைகள் உடலுக்கு தீங்கு இல்லையா?குட்டீஸ் அழகு.

சுசித்ரா

food

ஜலீலா அக்கா உங்க குட்டீஸ் அழகா இருக்காங்க. அவங்க பெயர் செல்லுங்கள் விருப்பம் இருந்தால்.

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

ஜலீலா அக்கா உங்க சமையல் நல்லா இருக்கு. என் கணவருக்கு உடம்பு சூடு ஆகி fiver அடிக்கடி வருது. அதுக்கு எந்தமாதிரி உணவு தரலாம்.
காளான், வெள்ளரி, பட்டர் காளான்.... எப்படி பார்த்து வாங்க்குவது கூறுங்கல் please.

சக்கரை வியாதி, கொலஸ்ரால், குழந்தைக்கு முயற்ச்சிப்பொர் என உணவுகளை அடிக்கடி தாங்கள்.அது ஒருசிலருக்கு உதவியா இருக்கும்.

சக்கடை, கொழுபு (மாமாவுக்கு) ஒருவருக்கு இருந்தால் அவர்கள் எந்த மாதிரி உணவு தரலாம்.
தவறு இருந்தால் மன்னிக்கவும்.

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

குட்டி பன் இமா உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி, ரொம்ப ஈசி செய்து பாருங்கள். கீமா, அல்லது சிக்கனும் பயன் படுத்தலாம்

ஜலீலா

Jaleelakamal

குட்டி பன் சுசித்திரா ஆமாம் பார்த்ததும் சாப்பிடனும் போல் இருக்கும்.

உங்களுக்கு சாஸ் சேர்த்து கொள்ள பிடிக்க வில்லை என்றால் பன்னின் இரு புறமும் புதினா துவையல் செய்து அதை தடவி இந்த முட்டையை நடுவில் வைத்து கொள்ளுங்கள்.
ஜலீலா

Jaleelakamal

பிரபா முன்பே உள்ள போட்டோ பற்றி கேட்டீங்க .
அது என் பையனும் , என் தங்கை பையன் களும்,
இந்த படத்தில் கூட நிற்பது என் நாத்தனார் பையன்.
ஜலீலா

Jaleelakamal

ஜலீலா அக்கா,இந்த குறிப்பு ரொம்ப ஈஸியாகவும்,சத்துள்ளதாகவும் உள்ளது .நான் கண்டிப்பாக செய்வேன்.அக்கா,இதில் பன் இல்லாமல் உள்ளே உள்ளது மற்றும் செய்து என் ஒரு வயது குழந்தைக்கு குடுக்கலாமா?.அவன் ரெட்மீட் சாப்பிட மாட்டேங்கிறான்.

jeyasutha
"As is our confidence, so is our capacity"

உடனடி பதிலுக்கு நன்றி ஜலீலா மேடம்

food

வாவ் ஜலீலா கைமாவுடன் முட்டையும் கலக்கி சேர்ப்பது புதுசா இருக்கு.
படத்துடன் அடிக்கடி கொடுத்து கலக்குரீங்க.
நன்றி.

டியர் சுதா உள்ளே உள்ளது மட்டும் தனியாக செய்தும் சாப்பிடலாம், ரெட் மீட் என்றால் நல்ல வேகவைத்து கொள்ளுங்கள்.
இதே போல் சிக்கனிலும் செய்யலாம், இப்படி கீமாவில் செய்வதால் குழந்தைகளுக்கு சாப்பிடுவதும் சுலபம், செரிமாணம் சரியாக இருக்கும், அப்படியே முழுங்காமல் மென்று சாப்பிட.
ஜலீலா

Jaleelakamal

வாங்க பர்வீன் கரெக்டா வந்து பதிவு போட்டு விடுவீர்கள்.செய்து பார்த்து எப்படி இருந்தது என்று சொல்லுங்கள்.
ஆமாம் இது புது முறைதான். முன்பு அனுப்பிய சில ரெஸிபிகள் இப்ப இன்னும் எதுவும் எடுக்கல, கொஞ்ச நாள் ஆகும்.
ஜலீலா

Jaleelakamal

i will try
சதாலட்சுமி

சதாலட்சுமி

ஹாய் ஜலீலா ராத்தா
இன்றைக்கு என்ட பகல் சாப்பாடு இதுதான். சாப்பிட்டு விட்டு வந்து பார்த்தா.......?
சோறு சாப்பிட்டு போர் அடிச்சா நல்ல சாப்பாடு இது எனக்கு.
ஆனால் இது மாதிரி முட்டைக்குல் கீமா போட்டால் இன்னும் சுவையாக இருக்கும்.
இன்னொருமுறை இதே மாதிரி செய்வேன்.
இன்ஷா அல்லாஹ்.
அன்புடன் அதி

ஜலிலாக்கா முகப்பில் பார்த்ததும் உங்க குறிப்பா இருக்கும்னு நினைத்து ஓப்பன் செய்தால் உங்க குறிப்பே தான்.வித்தியாசமா முட்டைக்குள் கீமா போட்டு செய்றது நல்லா இருக்கு.செய்துப் பார்க்கனும்.குட்டீஸ்களும் அழகா இருக்காங்க.

உங்க குட்டிபன் பார்க அழகா இருக்கு.என் பொன்னுக்கு இது ரொம்ப பிடிக்கும்.thanku so much.

masoodha

ஹாய் ஜலீலா
இன்றே செய்து பார்திட்டேன்.எப்போதும் பன்னில் கபாப் தான் வைப்பேன்.உங்க ரெசிப்பி படி முட்டையினுல் கைமா வைத்து செய்து பார்த்தேன்.சூப்பர் சுவை என் பசங்க வழக்கத்தவிட அதிகமாக கேட்டு வாங்கி சாப்பிட்டாங்க.எனக்கும் மிகவும் பிடித்தது.சுலபமாக செய்து லன்ச் பாக்ஸில் வைத்து கொடுக்கவும் ஏற்றது.மிகவும் நன்றி.

அன்புடன் பர்வீன்.

நன்றி ஜலீலா அக்கா,அப்படியே குடுக்கிறேன்.

jeyasutha
"As is our confidence, so is our capacity"

டியர் சதா லக்ஷ்மி செய்து பார்த்துவிட்டு சொல்லுங்கள்.
ஜலீலா

Jaleelakamal

டியர் அதிபா எங்க கத்தாரில் இருக்கிறீர்களா?
ரொம்ப நல்ல இருக்கும் எல்லாம் ரெடியாக இருந்தால் நிமிஷத்தில் செய்து விடலாம்.
ஆமாம் ஒரே சாதம் சாப்பிட்டு போரடித்தால் இப்படி தான் மதியத்துக்கு ஒரு நல்ல டிபனே செய்து சாப்பிடலாம்/
தோசை, வெந்தய கீரை பரோட்டா. வயிறுக்கு ரொம்ப லேசாக இருக்கும்.
இல்லை குபூஸ், சிக்கன் கிரில்.

ஜலீலா

Jaleelakamal

டியர் மசூதா எல்லா குட்டீஸுக்கும் இது போல் குட்டியா பார்க்க அழகாக கொடுத்தால் சாப்பிடாமல் அடம் பிடிக்கும் குழந்தைகள் கூட கூட இரண்டு கேட்டு வாங்கி சாப்பிடும்.
செய்து பாருஙக்ள்.
ஜலீலா

Jaleelakamal

டியர் மேனகா ஷிவனி குட்டி நலமா?
குழந்தைகள் உணவு எல்லாம் ட்ரயல் பார்த்து வைய்யுங்கள். இன்னும் இரண்டு வருடத்தில் உங்க குட்டிக்கு செய்து கொடுக்க, என்ன நான் சொல்வது சரியா?

ஜலீலா

Jaleelakamal

டியர் பர்வீன் உடனே செய்து பார்த்து விட்டீர்களா?
உங்களுக்காகவே இன்னும் நிறைய சாண்ட்விச் ரெஸிபி கொடுக்கலாம் போல தோணுது.
ஜலீலா

Jaleelakamal

டியர் சுதா டிரை பண்ணி பார்த்து விட்டு எப்படி இருந்தது என்று சொல்லுஙக்ள்.
ஜலீலா

Jaleelakamal

உங்களின் அன்பான பதிலுக்கு மிகுந்த சந்தோஷம்பா.
வேலையின் நடுவே நேரம் கிடைக்கும் போது படத்துடனும் தாங்கள் தந்து கொண்டு இருப்பது பார்க்க உண்மையில் பாராட்டனும்.
அன்புடன் பர்வீன்.

ஆமாம் கத்தாரில்தான் இருக்கிறேன்.
குபுஸுடன் கிரில் சிக்கன் நானும் நல்லா விரும்பி சாப்பிடுவேன்.
உங்கள் பதிலுக்கு ரொம்ப நன்றி
அன்புடன் அதி

காலையில் செய்வதற்க்கு ஈஸியாகவுள்ளது. சுவையும் சூப்பர். இதைப்போல் வேறு சாண்ட்விச் செய்முறைகள் இருந்தால் கண்டிப்பக யாரும் சமைக்கலாமில் கொடுக்கவும். எனக்கு காலையில் செய்வதற்க்கு மிகவும் சுலபமாகயிருககும்.என் பையனும் ரொம்ப விரும்பி சாப்பிடுகிறான் மிக்க நன்றி

டியர் பரிதா குட்டி பன் சாண்ட்விச் பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி.
இந்த குட்டி பன்னுக்கு முந்திரி கீர் ரொம்ப அருமையா இருக்கும். குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.
விஷேஷங்களில் செய்வது,ஈசியான ஸ்வீட்.

ஜலீலா

Jaleelakamal

assalamu alaikum jaleela akka..am very much inspired by ur recepies..all r nice.am in starting stage of cooking.hope soon i will become familiar with the help of u people..