காப்சிகோன் பட்டன் மஷ்ரூம்

தாளிக்க

கடுகு - சிறிது
வெந்தயம் - சிறிது
சோம்பு - சிறிது
சீரகம் - தேக்கரண்டி
எண்ணெய் - 1 குழி கரண்டி
வெங்காயம் - 1/2 நீள் வடிவில் சிறிதாக நறுக்கியது
ப. மிளகாய் - 3 நீள் வடிவில் நறுக்கியது
பூண்டு - 4 நறுக்கியது
இஞ்சி - சிறிது (பொடியாக நறுக்கியது)
கருவேப்பில்லை

தேவையான பொருட்கள்

மஷ்ரூம் - 10
காப்சிகோன் - 1 பெரியது
மிளகு தூள் - 1/2 மேசைகரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
உப்பு தேவையான அளவு
கெட்டியான தேங்காய் பால் - 1/4 cup

செய்முறை

முதலில் எண்ணெய் விட்டு தாளிக்க வேண்டியவற்றை தாளிக்கவும். வெங்காயம் லேசாக பொன் நிறமாக மாறும்போது காப்சிகோனை போட்டு கிளறி நன்கு வேக வைக்கவும்.
காப்சிகோன் வெந்தவுடன் மஷ்ரூமை அதனோடு போட்டு பிறட்டவும்.
பிறட்டும் போது உப்பு, மஞ்சள் தூள், மிளகு தூள் சேர்த்துக் கொண்டு பிரட்டவும்.
மூடி வைத்து வேக வைக்க வேண்டாம்)
நன்கு மஷ்ரூம் வெந்தவுடன் தேங்காய் பால் சேர்த்து, உப்பு பார்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.
விரும்பினால் கொத்த மல்லி இலை தூவிக் கொள்ளலாம். எலுமிச்சை சாறு கூட ஒரு மூன்று drops சேர்த்துக் கொள்ளலாம்.

லக்ஷ்மி

லஷ்மி எப்படி இருக்கிங்க? நீங்க குடுத்த டிப்ஸ் நல்லா இருக்குபா......
நான் செஞ்சி பார்த்துட்டு செல்ரேன்.

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

வெண் பொங்கலுக்கு பக்க உணவு சாம்பார் & சட்டினி (தேங்காய் இல்லாமல்) எப்படி செய்வது.
வேறுவிதமான பக்க உணவு உள்ளதா. செல்லுங்கள் please......

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

இட்லி சாம்பார் பொங்கலுக்கும் நல்லா இருக்கும். அறுசுவையில் பல விதம் இருக்கு, முயற்சித்து பாருங்க. தேங்காய் இல்லாம சட்னி... பொங்கலுக்கு... ம்ஹூம்.. ஒன்னும் தோனல, தோனுச்சுன்னா சொல்றேன். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் வனிதா எப்படி இருக்கிங்க? உங்க கிட்ட பேசுரது எனக்கு ரெம்ப சந்தேஷம். நான் உங்க கிட்ட பேசுரது fast time அதனாலதான்.

தேங்காய் கம்மியா இருந்தால்லும் பரவா இல்லை.
சாம்பார்னா காய் பேட்டு செய்யலாமா? (சந்தேகத்தை கேட்டேன்.)
வேறுவிதமான் பக்க உணவு உண்டா செல்லுங்கள். please....

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

:) thanku. கத்திரிக்காய் (அ) கேரட், பீன்ஸ் போட்டு செய்யலாம். தேங்காய் கம்மியான்னா பொட்டுகடலை சட்னி செய்யுங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

http://www.arusuvai.com/tamil/node/5244

பிரதா தாமு
இந்த லிங்கை செக் பண்ணுங்கள், உள்ந்து துவையல், வெங்காய துவையலில் கூட தேங்காய் அவ்வளவா சேர்க்க தேவையில்லை.
பொட்டு கடலை துவையலில் கூட தேங்காயிக்கு பதில் பாதம் சேர்த்து கொள்ளுங்கள்.
ஜலீலா

Jaleelakamal

ஜலீலா அக்கா இந்த லிங்கு பார்த்தேன். ஆனால் அது தேங்காய் பால் சாதம் தான் வருகிரது.
தேங்காய்க்கு பதிலாக பாதாம் பருப்பு அரைத்து செர்க்கலாமா........ கூறுங்கள்.

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

வெள்ளரி புதினா துவையல் தானே வருது.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஆமாம்பா இப்ப வெள்ளரி புதினா துவையல் தான் வந்தது. நான் தவறாக பார்த்து விட்டேன் மன்னிக்கவும்.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

பிரபாதாமு இப்பதான் இந்த பதிவை பார்க்கிரேன்பா...

வெண்பொங்கலுக்கு கத்த்ரிக்காய் சப்ஜி,பச்சை சுண்டைக்காய் சப்ஜி ரொம்ப நல்லா இருக்கும்பா(பச்சை சுன்டைக்காயை அம்மியில் வைத்து ஒருமரை நசுக்கி விட வேண்டும்.).வேறு சைட் டிஷ் நான் இதுஅரை செய்தது இல்லை.இங்கு என் ஃப்ர்ண்ஸ் எல்லாரும் காரக்குழம்பு வைக்கிராங்கப்பா பொங்கலுக்கு.

மேலும் சில பதிவுகள்