கிர்னி பழம் ஜுஸ் (Melon / Cantaloupe)

தேதி: February 1, 2009

பரிமாறும் அளவு: 4

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கிர்னி பழம் - 1
சர்க்கரை - 1/2 கப்
காய்ச்சி ஆறவைத்த பால் - 1 கப் (விரும்பினால் சேர்க்கவும்).


 

முதலில் கிர்னி பழத்தின் மேல் தோலினை நீக்கி விடவும்.
பின் அதனை பாதியாக வெட்டினால் உள்ளே விதைகள் இருக்கும். அதனை நீக்கி பழத்தினை தண்ணீரில் கழுவி கொள்ளவும்.
இப்பொழுது கிர்னி பழத்தினை பெரிய பெரிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.
ஜுஸரில் வெட்டி வைத்துள்ள பழம், சக்கரை மற்றும் பாலினை சேர்த்து நன்றாக அரைக்கவும்.
இதனை ப்ரிட்ஜில் வைத்து குளுமையாக அருந்த மிகவும் சுவையாக இருக்கும்.


பழத்தின் நடுவில் இருக்கும் விதைகளை தூக்கி வீசாமால் அதனை நன்றாக காயவைத்து பிறகு அதனுள் இருக்கும் சிறிய பருப்பினை எடுத்து வைத்து ஸ்வீட் செய்யும் பொழுது முந்திரிப் பருப்புக்கு பதிலாக இதனை சேர்க்கலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

கீதா கிர்னி பழம் ஜூஸ் நல்லா இருந்தது. என் பையன் இந்த பழம் சாப்பிடமாட்டான், ஆனால் இந்த ஜூஸ் அவனுக்கு பிடித்திருந்தது. ரொம்ப நன்றி!

மிகவும் சந்தோசம் மாலி…குழந்தைக்கு பிடித்து என்றால் அதை விட வேறு என்ன வேண்டும் ….கேட்டவே மகிழ்ச்சி…நீங்கள் சக்கரைக்கு பதிலாக வெல்லம் கூட சேர்த்து செய்தால் சுவையாக இருக்கும்.
அன்புடன்,
கீதா ஆச்சல்

அக்கா இன்று நான் கிர்னி பழம் ஜுஸ் செய்தேன். நன்றாக இருந்தது. பையன் விரும்பி குடித்தான். பால் மட்டும் சேர்க்கவில்லை. நன்றி அக்கா.

மிகவும் நன்றி அரசி.
குழந்தைக்கு மிகவும் பிடித்தது என்றால் வேறு என்ன வேண்டும் சொல்லுங்க..குழந்தைகளுக்கு பிடித்து சாப்பிட்டலே போதுமே…கேட்கவே மிகவும் சந்தோசம். உங்கள் மகன் பெயர் என்ன?
ஒரு முறை காய்ச்சிய பால் சேர்த்து செய்து பாருங்கள்…நன்றாக இருக்கும்.
அன்புடன்,
கீதா ஆச்சல்