ஸ்கிரம்பில்டு எக் (Scrambled Egg)

தேதி: February 1, 2009

பரிமாறும் அளவு: 2

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

முட்டை - 4
பட்டர் - 2 தேக்கரண்டி
உப்பு - 1 தேக்கரண்டி
மிளகு தூள் - 1/4 தேக்கரண்டி


 

முதலில் முட்டையினை உடைத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி நன்றாக கலக்கி கொள்ளவும்.
ஒரு நாண் ஸ்டிக் கடாயில் 1 தேக்கரண்டி பட்டரினை போட்டு கரைந்த பின் உடைத்து வைத்துள்ள முட்டையினை போட்டு நன்றாக கிளறிவிடவும்.
முட்டை பாதி வெந்தவுடன் உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து நன்றாக கிளறிவிட்டு வேகவிடவும்.
கடைசியில் மீதம் உள்ள 1 தேக்கரண்டி பட்டரினை சேர்த்து கிளறிவிட்டு சுடாக பரிமாறவும்.


வெளிநாடுகளில் வாழ்பவர்களுடைய காலை நேர உணவு.

மேலும் சில குறிப்புகள்


Comments

அக்கா ஸ்கிரம்பில்ட் எக் செய்தேன். நன்றாக இருந்தது. பட்டருக்கு பதில் நெய் சேர்த்தேன். நன்றி அக்கா.

மிகவும் நன்றி அரசி.
எவ்வளவு அழகாக வாய் நிறைய அக்கா என்று கூப்பிடுறிங்க…எங்கள் குடும்பத்திற்கே நான் தான் முதல் பொண்ணு..ஆனால் ஒருத்தர் கூட அப்படி கூப்பிட்டது இல்லை..
குழந்தைகள் எப்படி இருக்கின்றாங்க…நெய் சேர்த்து செய்திங்களா..மிகவும் சுவையாக இருக்கும்…அதே போல பட்டர் சேர்த்து ஒரு முறை செய்து பாருங்கள்… கூட வேறு சுவையுடன் நன்றாக இருக்கும்…
அன்புடன்,
கீதா ஆச்சல்