நண்டு கட்லெட்

image

வழங்கியவர் : DHUSHYANTHY

தேதி : ஞாயிறு, 01/02/2009 - 13:37

ஆயத்த நேரம் : 30 நிமிடங்கள்

சமைக்கும் நேரம் : 45 நிமிடங்கள்

பரிமாறும் அளவு : 5 நபர்களுக்கு

0
No votes yet
Your rating: None
 

 

  • (அவித்த)பெரியநீளக்கால் நண்டு(சதை) - 5
  • முட்டை - 2
  • கடலை மா - கால் கிலோ
  • சின்னவெங்காயம்(பொடியாக நறுக்கியது) - அரை கிலோ
  • இஞ்சி - ஒரு துண்டு
  • பச்சை மிளகாய்(பொடியாக நறுக்கியது) - 10
  • ரக்ஸ்தூள் - 100 கிராம்
  • உள்ளி - ஒன்று
  • கறுவாப்பட்டை - சிறிய துண்டு
  • கிராம்பு - 3
  • பெருஞ்சீரகம் - 2 தேவையானளவு
  • கறிவேப்பிலை - சிறிதளவு

 

  • இஞ்சி, உள்ளி, பெருஞ்சீரகம், கிராம்பு, கறுவாப்பட்டை ஆகியவற்றை நீர் விட்டு மைய அரைக்கவும்.
  • அடுப்பில் தாட்சியை வைத்து சூடாக்கி அதில் எண்ணெய் விட்டு சூடாக்கி அதில் பச்சைமிளகாய், வெங்காயம் போட்டு வதக்கவும்.
  • அதன் பின்பு நண்டு சதையுடன், கடலைமா, வதக்கிய பச்சைமிளகாய் வெங்காயம் அரைத்தகலவை, உப்பு, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நன்றாக குழைத்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி அவற்றை சாதுவாக அமர்த்தி கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் முட்டைகளை நன்றாக நுரை வரும்வரை அடிக்கவும்.
  • அடுப்பில் தாட்சியை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி அது கொதித்ததும் உருட்டி தட்டிய கட்லெட்டை முட்டையில் தோய்த்து ரக்ஸ் தூளில் பிரட்டி அதை எண்ணெயில் போட்டு சிவக்க பொரிக்கவும். பொரித்தவற்றை பரிமாறவும்.

Note:

நண்டு கட்லெட் ஒர் சுவையான சிற்றுண்டியாகும். இது அசைவ உணவு பிரியர்களுக்கு மிக மிக விருப்பமானதும் சுவையானதுமான ஒர் உணவாகும். எச்சரிக்கை - நண்டு அலர்ஜி உள்ளவர்கள் வைத்தியரின் ஆலோசனைப்படி உண்ணவும். கவனிக்க வேண்டிய விஷயங்கள்- நண்டுகளின் கொடுக்கு, ஓடு, கால்களை அகற்றி உடல் பகுதியை மட்டும் துப்பரவு செய்து தண்ணீரில் வேக வைக்கவும்.