உருளைக்கிழங்கு மசாலா

தேதி: February 1, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

1
Average: 1 (1 vote)

 

உருளைக்கிழங்கு - ஒன்று
எண்ணெய் - 2 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
சோம்பு - 1/2 தேக்கரண்டி
கடலைப்பருப்பு - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
வரமிளகாய் - 2
வெங்காயம் - ஒன்று
சிறிய தக்காளி - ஒன்று
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
மல்லி இலை - சிறிதளவு


 

உருளைக்கிழங்கை சிறிய சதுரமாக நறுக்கி மூழ்குமளவு தண்ணீரும் சிறிது உப்பும் சேர்த்து முக்கால் பாகம் வேகவைத்து தண்ணீர் வடித்து விடவும்.
எண்ணெயில் கடுகு, சோம்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, வரமிளகாய் தாளித்து வெங்காயம் வதக்கி தக்காளி, மஞ்சள் தூளும் சேர்த்து வதக்கவும்.
பின் வேகவைத்த உருளைக்கிழங்கும், தேவைப்பட்டால் உப்பும் சேர்த்து கிளறி விட்டு மூடி போட்டு 5 நிமிடம் வேக விட்டு மல்லி இலை தூவி இறக்கவும்.
சுவையான உருளைக்கிழங்கு மசாலா ரெடி.


மேலும் சில குறிப்புகள்