கடலை உருண்டை

தேதி: February 1, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

வேர்க்கடலை - 1/2 கிலோ
பனங்கருப்பட்டி அல்லது
பாகு வெல்லம் - 400 கிராம்


 

வேர்க்கடலையை வறுத்து தோல் நீக்கிக்கொள்ளவும்.
கருப்பட்டி அல்லது வெல்லத்தை கத்தியால் பொடியாக சீவிக் கொள்ளவும்.
வேர்க்கடலையை மிக்ஸியில் தூள் செய்யவும்.
சீவிய கருப்பட்டி, வேர்க்கடலைப்பொடி இரண்டையும் அகலமான பாத்திரத்தில் போட்டு கையால் நன்கு பிசையவும்.
1/4 டம்ளர் அளவு கொதி நீரை ஸ்பூனால் எடுத்து கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து நன்கு, அடித்து பிசைந்தால், எண்ணெய் விடும்.
நன்கு எண்ணெய் விடும் அளவு பிசைந்து சிறு உருண்டைகளாக உருட்டி சாப்பிடலாம்


மேலும் சில குறிப்புகள்


Comments

HELLO SIS MURUTHABA IS VERY TASTE THIS IS UR OWN RECIPE YA OR HOTEL DISH IT IS VERY TASTE

பொறூமை இருந்தால் எதையிம் சாதித்து விடலாம்

சகோதரி ஐனுன்,
முர்தபா சொந்தமாக யோசித்து செய்ததுதான்.ஹோட்டலில் வேறு மாதிரி ரூபத்தில் முர்தபா தருவார்கள்.அடிக்கடி அறுசுவைக்குள் வருகின்றீர்கள்.உங்களைப்பற்றி அறிய ஆவல்.தமிழில் பயோடேட்டா திரட்டில் விரும்பினால் உங்களைப்பற்றி தாருங்கள்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

hello sis i dont type in tamil but i will try

பொறூமை இருந்தால் எதையிம் சாதித்து விடலாம்

முயற்சி பண்ணுங்கள் ஐனுன்.கீழே எழுத்துதவியை கிளிக் செய்து கீழே உள்ள பாக்சில் ஆங்கிலத்தில் டைப் செய்தால் மேலே உள்ள பெட்டியில் தமிழில் எழுத்துக்கள் வரும்.டைப் பண்ணபண்ண உங்களுக்கே சுவாரஸ்யமாக இருக்கும்.முயற்சி செய்யுங்கள்.இனி உங்கள் பதிவுகளை தமிழில் எதிர் பார்க்கின்றேன்.ஆர்வத்திற்கு நன்றி.
ஸாதிகா

arusuvai is a wonderful website

thanks sis ............i will try

பொறூமை இருந்தால் எதையிம் சாதித்து விடலாம்

ஸாதிகா அக்கா, இதை நான் எப்போதோ செய்து பார்த்தேன். இங்கு கிடைக்கும் கடலையில் எண்ணெய் அதிகமாக இருக்கும். மிக்ஸியில் பொடித்தவுடன் நன்றாக மாவாகி விட்டது. அதனால் உருண்டை பிடிப்பதற்கு சுடு நீர் எல்லாம் தேவைப் படவில்லை. சாப்பிட டேஸ்டியாக இருந்தது. படம் கூட எடுத்துள்ளேன் அட்மினுக்கு அனுப்பி வைக்கிறேன். நன்றி உங்களுக்கு

வானதி,பின்னூட்டத்திற்கு நன்றி.இங்கு கிடைக்கும் கடலையில் எண்ணெய் வருவதென்பது சற்று சிரமம் தான்.அதனால் தான் கொதிநீரை தெளித்து பிசைந்தால் எண்ணெய் பிரியுமென்பதற்காக இப்படி செய்வோம்.வளரும் சிறுவர்,சிறுமிகளுக்கு மிகவும் ஊட்டமுள்ள,சுவையான ஸ்னாக்ஸ் இது.
ஸாதிகா

arusuvai is a wonderful website

இந்த குறிப்பினைப் பார்த்து திருமதி. வானதி அவர்கள் தயாரித்த கடலை உருண்டையின் படம்

<img src="files/pictures/aa202.jpg" alt="picture" />

வாவ்..என்ன அழகான படங்கள்!!!எதிரே டேபிளின் மீது வைத்து இருப்பது போல் அத்தனை இயற்கையாக உள்ளது.எடுத்து சாப்பிடலாம் போல் உள்ளது.அழகாக படம் எடுத்து அனுப்பிய வானதிக்கு என் அன்பான நன்றி.வெளியிட்ட அறுசுவை நிறுவனத்தாருக்கும் என் நன்றி.
ஸாதிகா

arusuvai is a wonderful website