வதக்கிய தேங்காய் சட்னி

தேதி: February 2, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.5 (2 votes)

 

தேங்காய் - 1 கப்
தக்காளி - 1 சிறியது
வெங்காயம் - 1 சிறியது
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிது
புளி - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 டீஸ்பூன்


 

ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி எல்லாப் பொருட்களையும் வதக்கி கொள்ளவும்,
ஆறியவுடன் மிக்ஸியில் போட்டு நைஸாக அரைக்கவும்,
வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சட்னியை சேர்த்து 2 நிமிடம் வதக்கி இறக்கவும்,
இது இட்லி, தோசைக்கு நல்ல பொருத்தமாக இருக்கும்


மேலும் சில குறிப்புகள்


Comments

ஹாய் ரேணுகா உங்கள் வதக்கிய தேங்காய் சட்னி செய்தேன் ரொன்ப ஈசியாக இருந்தது. வித்தியாசமான சுவை நன்றாக இருந்தது.இது ராணி

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

ராணி இது இட்லி தோசைக்கு நல்லா இருக்கும்,எங்க வீட்டில் ஆட்டு கல்லில் அரைப்பார்கள்,இன்னும் சுவையாக இருக்கும்,மிகவும் நன்றி ராணி
அன்புடன்
ரேணுகா

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

நானும் இதுபோல் சற்று வித்தியாசமாக செய்வேன் இதுவும் சூப்பர்...நன்றி

வாழு, வாழவிடு..