முட்டை குழம்பு - 2

தேதி: February 2, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

முட்டை - 4
சின்ன வெங்காயம் - 10
தக்காளி - 2
அரைக்க:-
காய்ந்த மிளகாய் - 6
இஞ்சி, பூண்டு விழுது - 1 ஸ்பூன்
பட்டை - ஒரு துண்டு
லவங்கம் - 1
தேங்காய் - 2 டேபுள் ஸ்பூன்
சோம்பு - 1/2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு


 

முட்டையை உடைத்து ஊற்றி சிறிது உப்பு சேர்த்து நன்றாக அடித்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி ஆவியில் வேகவைத்து சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் ஊற்றி வெங்காயம் தக்காளியை வதக்கி அரைத்த விழுது சேர்த்து வதக்கவும்.
நன்றாக வதக்கி அரைகப் தண்ணீர் சேர்த்து குழப்பு திக்கானதும் முட்டையை போட்டு ஒரு கொதி விட்டு இறக்கவும்,
நல்ல மணமான சாதத்திற்கு எற்றது,
மசாலா கெட்டியாக வைத்து முட்டையை பிரட்டி விட்டால் இன்னும் நன்றாக இருக்கும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

ஹாய் ரேணுகா! உங்கள் முட்டைக்குழம்பு செய்ய ஈஸியான ரேசப்பி. செய்து சாப்பிட்டேன். சுவையும் நன்று. நன்றி இந்த குறிப்பு தந்தமைக்கு. அன்புடன் ராணி

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

ராணி மிக்க நன்றி.இதன் சுவை அத்தனை அருமையாக இருக்கும்,விருந்தினர் வந்தால் செய்வேன்,மீதமே வராது,உடனே காலி ஆகும்

அன்புடன்
ரேணுகா

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

உங்கள் முட்டைகுழம்பு செய்தேன் ஆனால் முட்டையை வேகவைக்காமல் மசாலாவில் அப்படியே ஊற்றிவிட்டேன் நல்ல சுவையாக இருந்தது... நன்றி..

வாழு, வாழவிடு..