தக்காளி சாதம்

தேதி: February 2, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.5 (2 votes)

 

உதிரியாக வடித்த சாதம் - 1 கப்
வெங்காயம் - 2
தக்காளி - 3
பச்சை மிளகாய் - 1
கறிவேப்பிலை - சிறிது
கடுகு, உளுத்தம் பருப்பு - 1/2 ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/2 ஸ்பூன்
உப்பு
எண்ணெய் - தாளிக்க
வறுத்து அரைக்க:-(தண்ணீர் சேர்க்காமல் பொடியை போல்)
தனியா - 1 ஸ்பூன்
கடலைப் பருப்பு - 1ஸ்பூன்
உளுந்தம் பருப்பு - 1 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
தேங்காய் துருவல் - 2 ஸ்பூன்


 

வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் நீளமாக நறுக்கவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் தாளித்து வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்,
பிறகு தக்காளி சேர்த்து கரையும் வரை வதக்கவும்.
மஞ்சள் தூள் உப்பு சேர்த்து வதக்கி வறுத்து பொடித்த தூளை சேர்த்து ஒருமுறை கிளறி இறக்கவும்,
சாதத்தினை சேர்த்து நன்றாக கிளறி பரிமாறவும்


மேலும் சில குறிப்புகள்


Comments

ரேணுகா... உங்க குறிப்புகள் எல்லாம் சற்று வித்தியாசமா இருக்கு. பொடி சேர்க்கும் விதம். ரொம்ப வாசமா நல்லா இருந்தது. :) நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் ரேணு,
இன்று லன்ச்க்கு உங்க தக்காளி சாதம் செய்தேன். வறுத்து பொடித்து போட்டது, நல்ல மணமாக‌, சுவையாக வந்திருந்தது. குறிப்புக்கு நன்றி ரேணு!

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

இன்று இரவு உணவுக்காக செய்தேன். மிகவும் எளிமையாகவும் சுவையாகவும் இருந்தது. மிகவும் நன்றி.

அன்பு சகோதரன்

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

ரேணு, தக்காளி சாதம் பொடி சேர்த்து செய்தது வித்தியாசமாக சுவையாக இருந்தது.. ஒன்றிரண்டு ஹோட்டல்களில் இது போன்ற சுவையில் சாப்பிட்டதாக ஞாபகம்.. நன்றி...

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா

தக்காளி சாதம் வித்தியாசமான சுவையுடன் நன்றாக இருந்தது ரேணுகா நன்றி
நன்றிகளுடன்,
லக்ஷ்மிஷங்கர்

அனாமிகா உங்க்ளுக்கு இது பிடித்ததில் மகிழ்ச்சி,ரெம்ப நல்லா இருக்கும்,மிக்க நன்றி

அன்புடன்
ரேணுகா

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

தக்காளி சாதம் சூப்பர். ஈசியா இருந்தது.

Don't Worry Be Happy.

சந்தனா என்னவருக்கு தக்காளி சாதம் செய்தால் ஊருக்கே மனக்கனும் என்பார்.இது போல் செய்தால் நன்றாக இருக்கு என்பார்.ஹோட்டலில் நான் தக்காளி சாதம் சாப்பிட்டதில்லையே சந்தனா:( மிக்க நன்றி

அன்புடன்
ரேணுகா

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

ஹைஷ் அண்ணா உங்களுக்கு பிடித்ததில் மகிழ்ச்சி.நேரம் இல்லாத போதும் செய்து சொல்கிறீர்கள்,மிக்க நன்றி அண்ணா

அன்புடன்
ரேணுகா

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

ஸ்ரீ வறுத்து போட்டால் மனக்கும்,மிக்க நன்றி பின்னூட்டம் அளித்ததுக்கு

அன்புடன்
ரேணுகா

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

வனிதா எனக்கு வாசமா இருக்கனும்,ஆனால் வாயில் எதும் தட்டுபடகூடாது,அதான் பொடியாக்கி சேர்ப்பேன் வறுத்து சேர்ப்பதால் நல்ல மனமா இருக்கும்.நன்றி வனிதா

அன்புடன்
ரேணுகா

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா