ஹாஃப் பாயில்டு முட்டை தோசை

தேதி: February 3, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

தோசை மாவு - ஒரு கப்
முட்டை - 2
உப்பு - 2 பின்ச்
நெய் - தோசைக்கு தேவையான அளவு


 

முட்டையை வேகவைக்க முட்டை மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து 2 கொதி வந்ததும் தீயை அணைத்து விடவும்.
சிறிது சூடு அடங்கியதும் முட்டையை எடுத்து மேலே ஓட்டை ஒரு தட்டு தட்டி உள் உள்ள முட்டையை ஸ்பூனால் எடுத்து சூடாக ஒரு பவுலில் போட்டு உப்பும் கலந்து நன்கு ஸ்பூனால் அடித்து குழம்பு போல் ஆக்கி வைக்கவும்.
முட்டை ஒரேடியாக வெந்து போகாமலும் தண்ணீர் போல இல்லாமலும் வேக வைக்க வேண்டும். சிறிது அதிகம் வெந்துவிட்டால் பால் கலந்து அடிக்க கொஞ்சம் குழம்பு போல் வரும்.
பிறகு தோசையை மொறுகலாக நெய் ஊற்றி சுட்டு அதனை அடித்த ஹாஃப் பாயில்டு முட்டையில் முக்கி சாப்பிடலாம்.


மாவின் மேல் முட்டை ஊற்றி செய்யும் முட்டை தோசையை விட இது செம்ம அருமையாக இருக்கும். முட்டையும் தோசையும் கண்டால் ஒடும் எந்த பிள்ளையும் இதனை விரும்பி சாப்பிடும். தோசை சுட்ட பின் முட்டை உடைத்தால் போதும் முட்டை சூடாக இருக்க சாப்பிட்டால் தான் மிகவும் சுவையாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்