ப்ளைன் & யெல்லோ கீ ரைஸ்

தேதி: February 3, 2009

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பாஸ்மதி அல்லது சீரக சம்பா பச்சை - அரை கிலோ
நெய் - 50 மில்லி
எண்ணெய் - 50 மில்லி
பட்டை - 1
கிராம்பு - 2
ஏலம் - 3
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள்ஸ்பூன்
வெங்காயம் - 1
மல்லி, புதினா - சிறிது
தேங்காய் - பாதி பால் எடுக்க (விரும்பினால்)
தண்ணீர் - 2 அளவு
சாஃப்ரான் - பின்ச்
மஞ்சள் தூள் - 2 பின்ச் அல்லது கலர் - 1 பின்ச்
உப்பு - தேவைக்கு


 

அரிசியை தண்ணீரில் அலசி அரைமணி நேரம் ஊறவைக்கவும்.
வெங்காயம் நீளமாகவும், மல்லி புதினா பொடியாகவும் கட் செய்து வைக்கவும். 1- 2 டேபிள் ஸ்பூன் கொதிநீரில் சாஃப்ரான், மஞ்சள் பொடி கலந்து வைக்கவும்.
அடிகனமான பாத்திரத்தில் நெய், எண்ணெய் விட்டு சூடானதும், ஏலம், பட்டை, கிராம்பு போடவும். வெங்காயம் சேர்த்து வதங்கியதும், இஞ்சி பூண்டு சேர்க்கவும், மல்லி புதினா, உப்பு சேர்த்து 2 அளவுத்தண்ணீர் வைத்து மூடி கொதி வரவும் அரிசியை தட்டி மூடவும்.
சோறு வெந்தவுடன் சமப்படுத்தி ஒரு பாதியில் சாஃப்ரான், மஞ்சள் நீரை மேலோட்டமாக விடவும். சிம்மில் வைத்து ஐந்து நிமிடம் மூடவும்.
பின்பு திறந்து கவனமாக மஞ்சள், வெள்ளை சோறு கலவை பிரட்டவும். ஐந்து நிமிடம் மூடி வைக்கவும்.
சுவையான கமகமக்கும் ப்ளைன் & யெல்லொ கீ ரைஸ் ரெடி. இதனை சிக்கன் அல்லது மட்டன் கிரேவி, தாளிச்சா, தயிர் பச்சடியுடன் பரிமாறவும்.


மஞ்சள் கலரும், வெள்ளையுமாக கீ ரைஸ் பார்க்க அழகாக இருக்கும். தண்ணீர் அளவு சரியாக வைக்கவேண்டும். கூடினாலும் குழைந்து விடும், குறைந்தாலும் அரிசி தட்டுப்படும்.

மேலும் சில குறிப்புகள்