வாழைப்பழ கேன்டி

தேதி: April 3, 2006

பரிமாறும் அளவு: 2 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பால் - 500 மில்லி
வாழைப்பழம் - 3
முந்திரிப்பருப்பு - 5
ஏலக்காய் - 2
டூட்டி புரூட்டி - 10 கிராம்
சீனி - 250 கிராம்
ரவா - 100 கிராம்
நெய் - 50 கிராம்
தேங்காய் - கால் மூடி துருவியது


 

வாழைப்பழம், பால் இரண்டையும் சேர்த்து நன்கு அரைக்கவும்.
தேங்காய் துருவலை சிறிது நெய்யில் வதக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் மீதமுள்ள நெய்யினை விட்டு அடுப்பில் வைக்கவும். அதில் அரைத்த வாழைப்பழத்தை போட்டு வதக்கவும்.
பிறகு அத்துடன் ரவா, சீனி சேர்த்து பொன்னிறமாக வரும்வரை நன்கு கிளறவும்.
ஒரு தட்டில் நெய் தடவி பொன் நிறமாக வதக்கியதை ஊற்றவும். ஆறிய பின் கேக்குகளாக துண்டுகளாக்கி பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்