வெஜிடபிள் எக் ஆம்லெட்

image

வழங்கியவர் : asiya omar

தேதி : செவ்வாய், 03/02/2009 - 19:19

ஆயத்த நேரம் : 15 நிமிடம்

சமைக்கும் நேரம் : 15 நிமிடம்

பரிமாறும் அளவு : 4 நபர்களுக்கு

0
No votes yet
Your rating: None
 

 

  • முட்டை - 4
  • கோஸ், காலிஃப்ளவர், குடை மிளகாய் - சிறிய கப் (கட் செய்தது)
  • வெங்காயம் - 1
  • பூண்டு - 2 பல்
  • மஞ்சள் பொடி - அரை ஸ்பூன்
  • மிளகு பொடி - அரை ஸ்பூன்
  • பொட்டுக்கடலை பொடி செய்தது - 2 டீஸ்பூன்
  • பச்சை மிளகாய் - 2
  • உப்பு, எண்ணெய் - தேவைக்கு.

 

  • முதலில் கோஸ், காலிஃப்ளவர், குடை மிளகாய், வெங்காயம், மிளகாய், பூண்டு பொடியாக கட் செய்து கொள்ளவும். காய்கறியை மட்டும் சிறிது தண்ணீர் தெளித்து வேக வைத்து எடுக்கவும்.
  • ஒரு பவுளில் மஞ்சள் பொடி, மிளகு பொடி, பொட்டுக்கடலை பொடி செய்தது, உப்பு சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்துக்கொள்ளவும். அதனுடன் காய்கறிகள், வெங்காயம், பூண்டு, மிளகாய், முட்டை சேர்த்து கலக்கி கொள்ளவும்.
  • எண்ணெயை தோசைக்கலத்தில் விட்டு, தயார் செய்து வைத்ததை நான்காக சுட்டு எடுக்கவும்.
  • சுவையான வெஜ் எக் ஆம்லெட் ரெடி.

Note:

இதனை பரோட்டா, சப்பாத்தியில் ரோல் செய்தும் சாப்பிடலாம். ரசம் சாதத்திற்கு தொட்டுக்கொண்டும் சாப்பிடலாம்.







very nice. i wil try this item