திப்பிலி சூப்

தேதி: April 3, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (1 vote)

 

கண்டந் திப்பிலி - 5 கிராம்
தக்காளி - 200 கிராம்
பெரிய வெங்காயம் - 100 கிராம்
மிளகுத்தூள் - ஒரு கரண்டி
மிளகாய் வற்றல் - 4
பூண்டு - 4 பல்
இஞ்சி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு


 

தக்காளி, வெங்காயம், பூண்டு, இஞ்சி ஆகியவற்றை இரண்டு கப் நீரில் வேகவைத்துக் கொள்ளவும்.
கண்டதிப்பிலி, மிளகாய் வற்றல் ஆகியவற்றை வெறும் வாணலியில் வறுத்து நைசாக பொடித்துக் கொள்ளவும்.
வேகவைத்த தக்காளி, பூண்டு, இஞ்சி ஆகியவற்றை மிக்ஸியில் அடித்து வடி கட்டிக் கொள்ளவும்.
அத்துடன் கண்டதிப்பிலி பொடியை உப்பு கலந்து சிறிது நேரம் கொதிக்க விடவும்.
கொதித்த பின்பு இறக்கி வைத்து மிளகு தூள் சேர்த்து சூப் பறிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்