ஹோட்டல் சாம்பார்

தேதி: February 5, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.4 (46 votes)

 

துவரம்பருப்பு - 1 டம்ளர்
பெரிய வெங்காயம் - 1
சின்னவெங்காயம் - 7
தக்காளி - 4
மஞ்சள்பொடி - சிட்டிகை
சாம்பார்பொடி - 2டீஸ்பூன்
பச்சைமிளகாய் - 2
மல்லித்தழை - சிறிது
கட்டிப்பெருங்காயம் - 1/4 இன்ச் துண்டு
முருங்கைக்காய் - 1
கத்தரிக்காய் - 3
உப்பு - சுவைக்கு
வெல்லம் - சிறிய துண்டு
தாளிக்க:
கடுகு
வெந்தயம்
சீரகம்
காய்ந்தமிளகாய்
கறிவேப்பிலை
நல்லெண்ணெய்


 

துவரம்பருப்பு, நீளமாக நறுக்கிய பெரிய வெங்காயம், நறுக்கிய தக்காளி, சிறிய வெங்காயம், மஞ்சள்பொடி, பெருங்காயம், வெல்லம் ஆகியவற்றை 2 1/2கப் நீர் சேர்த்து குக்கரில் வேக வைக்கவும்.
வெந்ததும் குழிகரண்டியால் நன்கு மசித்து விட்டு மேலும் 1/2 டம்ளர் நீர் சேர்த்து 2 இன்ச் நீளத்திற்கு நறுக்கிய முருங்கை, சிறிய சதுரங்களாக நறுக்கிய கத்தரிக்காய், உப்பு சேர்த்து மேலும் ஒரு விசில் வரும் வரை வேக வைக்கவும்.
சாம்பார் பொடியை சிறிது நீரில் கரைத்து சேர்க்கவும்.
பொடியாக நறுக்கிய மல்லித்தழை சேர்த்து மேலும் சிறிது நேரம் கொதிக்கவிடவும்.
மற்றொரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம், சீரகம், மிளகாய், கறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும்.


எங்கள் வீட்டில் சாம்பார் சாப்பிடுபவர்கள் சரவணபவன் சாம்பார் போல் உள்ளதே என்பார்கள். நீங்களும் செய்து சாப்பிட்டு விட்டு சொல்லுங்களேன் எப்படி இருந்தது என்று.
தக்காளியின் புளிப்பே சாம்பாருக்கு போதும். இதில் தான் சுவை இருக்கின்றது. புளி இல்லாமல் சாம்பாரா என்பவர்கள் தக்காளி எண்ணிக்கையை குறைத்துக்கொண்டு புளி சேர்க்கலாம். முருங்கைக்காய், கத்தரிக்காய் தவிர மற்ற காய்களிலும் சாம்பார் செய்யலாம். காய் சேர்க்காமல் செய்யும் சாம்பார் டிபனுக்கு ஏற்றது.

மேலும் சில குறிப்புகள்


Comments

Hi Shadiqah i registered in this site mainly to give feedback about ur Hotel sambar receipe. I tried it more than 5 times and it came out superb. My whole family liked it. Im just a beginner in cooking and this is my first hit.It tasted good even without vegetables. Thanks a lot.

We are using your approach, thx for sharing with us.

its nice

SAMAYAL ORU ARUMAIYANA KALAI.

POOJABALAJI

Sadiqah akka

it's taste is very super.. for all (idly, dosa & rice)

thank u

it tastes good... i tried it in my home... v all liked it.. thanks for ur receipe. its superrr

ஸாதிகா அக்கா
உங்க சாம்பார் குறிப்பு பார்த்து நானும் செய்தேன்.அருமையாக இருந்தது.
மிக்க நன்றி

ஸாதிகா அக்கா நான் டை பண்ணி பார்க்கிறேன்.
சம்பாரை வித விதமா வைகக் எனக்கு ரொம்ப பிடிக்கும்.
நீங்கள் சொல்லும் போதே சரவணபாவாவில் சாப்பிடுவது சரவணபாவாவில் சாப்பிடுவது சாப்பிடுவது போல் ஒரு பிரமை..

ஜலீலா

Jaleelakamal

இந்த முறையில் ஒரு முறை டிரை பண்ணிப்பாருங்கள் ஜலி.சுவை அபரிதமாக இருக்கும்.பின்னூட்டத்திற்கு நன்றி.
ஸாதிகா

arusuvai is a wonderful website

ple tell the recipe for sambar powder

பொறூமை இருந்தால் எதையிம் சாதித்து விடலாம்

ple tell the recipe for sambar powder

பொறூமை இருந்தால் எதையிம் சாதித்து விடலாம்

இந்த லின்க்கை பாருங்கள்.சாம்பார்பொடி குறிப்பு கிடைக்கும்.
http://www.arusuvai.com/tamil/node/7174
ஸாதிகா

arusuvai is a wonderful website

உங்கள் ஹோட்டல் சாம்பார் இருமுறை சமைத்து விட்டேன்..மிகவும் அருமை..புளி இல்லாமல் தான் சுவையாக இருக்கிறது.மிகவும் அருமையான குறிப்பு தந்ததற்கு எனது பாராட்டுக்கள்

சாம்பார் செய்து அருமையாக வந்தது குறித்து மகிழ்வாக இருந்தது.பின்னூட்டத்திற்கு நன்றி

arusuvai is a wonderful website

உங்கள் ஸாதிகா அக்கா ஹோட்டல் சாம்பா ர்செய்து சாப்பிட்டாச்சு நல்ல இருந்தது.

ஜலீலா

Jaleelakamal

அடடா,தொடர்ந்து என்னுடைய சமையலை செய்து சுவைத்த சமையல் திலகம் ஜலீலா தங்கச்சி வாழ்க.நன்றி.
ஸாதிகா

arusuvai is a wonderful website

இன்று உங்கள் ஹோட்டல் சாம்பார் வெய்த்தேன் சூப்பர்...டேஸ்ட். புளி இல்லாமல் தான் சுவையாக இருக்கிறது. உங்கள் குறிப்புக்கு மிக்க நன்றி.

மைதிலி

Mb

அன்பு மைதிலி,
பின்னூட்டத்திற்கு நன்றி.உண்மையில் புளி சேர்க்காமல் சாம்பாருக்கு தக்காளியை அதிகம் சேர்ப்பதில்தான் சுவை அதிகம்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

ஹோட்டல் சாம்பார் நன்றாக இருந்தது. செய்வதற்கும் மிக சுலபம். இட்லிக்கு நல்ல காம்பினேஷன். நன்றி!

இன்று இரவு டின்னருக்கு ஹோட்டல் சாம்பார் செய்திருந்தேன். ஆஹா... உண்மையிலேயே அபார சுவை, மணம்!!. ரொம்ப அருமையாக இருந்தது. நாளைக்கு தோசைக்கும் நல்ல காம்பினேஷனா இருக்கும். இந்த சுவைமிகு சாம்பார் குறிப்புக்கு மிக்க நன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

ரொம்ப நன்றி.அபார சுவையாக இருந்தது என்ற உங்கள் வரிகள் மிகவும் சந்தோஷத்தைத்தந்தது.
ஸாதிகா

arusuvai is a wonderful website

இந்த குறிப்பினை பார்த்து திருமதி. ஜலீலா அவர்கள் தயாரித்த ஹோட்டல் சாம்பாரின் படம்

<img src="files/pictures/aa236.jpg" alt="picture" />

அழகாக படம் எடுத்து அனுப்பி இருந்தமைக்கு நன்றி.வெளியிட்ட அறுசுவை நிர்வாகத்திற்கும் நன்றி.
ஸாதிகா

arusuvai is a wonderful website

ஸாதிகா அக்கா இந்த சாம்பார் ரொம்ப இருந்தது. இட்லி, சாதம் இரண்டிற்கும் பொருத்தமாக இருந்தது. நன்றி உங்களுக்கு.

பின்னூட்டத்திற்கு மிகவும் நன்றி.சந்தோஷமாக உள்ளது.என் குறிப்புகளில் தம் பிரியாணி,பட்டர்பிஸ்கட்டுக்கு அடுத்த படியாக இந்த ஹோட்டல் சாம்பார் ஸ்னேகிதிகளுக்கு மிகவும் பித்தமாகி விட்டது.
ஸாதிகா

arusuvai is a wonderful website

என் ஹஸ்ம் என் மகளும் ஹோட்டல் சாம்பாரை மிகவும் ரசித்து சாப்பிட்டார்கள். நானும் இதுவரை இது போன்ற சாம்பார் சாப்பிட்டது இல்லை. நன்றி

லதா

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

அன்பு ஹைஷ்,
பின்னூட்டத்திற்கு மிக்க நன்றிகுடும்பத்தினர் அனைவருக்கும் பிடித்தமைக்கு மகிழ்ச்சி.இதுவரை இதுபோல் சாம்பார் சாப்பிட்டது இல்லை என்ற வரிகள்..ஓஹ்..இந்த மகிழ்ச்சிக்கு எல்லாம் வழி வகுத்த அதிராவுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

இன்னிக்கு தோசைக்கு செய்தேன்.இப்பதான் சாப்பிட்டு உடனே பின்னூட்டம் குடுக்கிறேன்.நான் இட்லி சாம்பார்க்கு முருங்கைக்காய்,வெல்லம் சேர்த்து செய்ததில் அபாரா சுவை.சாம்பார்னா அது சாதிகாக்காவின் ஹோட்டல் சாம்பார்தான்.ஹோட்டல் சாம்பாரா பேஷ் பேஷ் ரொம்ப நல்லா இருந்தது.நன்றி உங்களுக்கு!!

ஸாதிகா அக்கா ஹோட்டல் சாம்பார் படம் பார்த்தீர்களா?
அதில் என்ன காய்கள் சேர்த்தேன் தெரியுமா? (கோவைக்காய்,கத்திரிக்காய், முருங்கக்காய்,பூசனி,கேரட், பெரிய வெள்ளரிக்காய்)

இதற்கு தொட்டுக்க தான் பிங்கர் சிப்ஸ் செய்தேன்.

Jaleelakamal

ஹாய் சாதிகா அக்கா. உங்க சாம்பார் ரொம்ப நல்லா இருந்தது. நன்றி.

தக்ஷினா

ஹாய் சாதிகா நானும் உங்களுடைய்ய ஹோட்டல் சாம்பார் செய்து பாத்தேன் ரொம்ப சுவையாகவும் செய்ய சுலபமாகவும் இருந்தது பத்துநிமிடத்தில் செய்துவிடலாம் முன்னலாம் நான் சாம்பார் வைக்க அரை மணிநேரமாகும்

அன்பின் மேனகா,ரொம்ப நன்றி.சாம்பார் குறிப்பு உங்கள் அனைவரையும் கவர்ந்திருக்கிறது மிகவும் சந்தோஷமாக உள்ளது.
அன்பு ஜலீலா,
படத்தைப்பார்த்து விட்டு பின்னூட்டமும் கொடுத்து இருந்தேனே.ரொம்ப நன்றி.
அன்பு ஜஸி,
ஓ..பத்து நிமிடத்தில் செய்து விட்டீர்களா?மிகவும் சந்தோஷம்.பின்னூட்டத்திற்கு நன்றி.
ஸாதிகா

arusuvai is a wonderful website

உங்கள் பின்னூட்டம் மகிழ்ச்சியை தந்தது.நன்றி.நானும் இட்லி,தோசை,பொங்கல்,வடை போன்றவற்றுக்கு இந்த முறையில் தான் செய்வேன்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

இன்னைக்கு உங்க ஹோட்டல் சாம்பார் ஆன்டி. உங்க முறை வந்த போது சமைத்தேனான்னு நினைவில்லை.. முடியவுமில்லை... இப்ப சமைத்து வைத்திட்டு வீரா ஆபிஸ் நண்பர்களின் தீர்ப்புக்காக காத்திருக்கிறேன்.... வந்ததும் சொல்லறேன்.. எல்லாம் வட நாட்டு பிரெண்ட்ஸ்...

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

நெடுநாட்கள் கழித்து பேசுகிறோம்.நலமா?பின்னூட்டத்திற்கு மிகவும் நன்றி.வடநாட்டு நண்பர்களின் தீர்ப்பை கேட்டு சொல்லுங்கள்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

i like this sambar verymuch

vazhga valamudan