தாளிச்சா

தேதி: February 5, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (6 votes)

 

துவரம்பருப்பு - 3/4 டம்ளர்
ஆட்டிறைச்சி - 150 கிராம்
பீன்ஸ் - 6-8
கேரட் - 1(சிறியது)
உருளை - 19 (சிறியது)
கத்தரிக்காய் - 3
மாங்காய் - 1 (சிறியது)
மஞ்சள்பொடி - 1/4 டீஸ்பூன்
மிளகாய்ப்பொடி - 1 டீஸ்பூன்
உப்பு - சுவைக்கு
மல்லித்தழை - சிறிது
உப்பு எலுமிச்சை - 1 (விரும்பினால்)
தாளிக்க:
வெங்காயம் - 1
தக்காளி - 1
இஞ்சிபூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
பட்டை - சிறுதுண்டு
ஏலம்- 2
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
மல்லித்தழை, புதினா - சிறிது


 

துவரம்பருப்பு, ஆட்டிறைச்சி, மஞ்சள்பொடி சேர்த்து குக்கரில் வேக வைத்துக்கொள்ளவும்.
பீன்ஸ், கேரட், உருளைக்கிழங்கு, மாங்காயை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
வெந்த பருப்புடன் காய்கள், மல்லித்தழை, உப்பு, பாதிஅளவு மிளகாய்த்தூள் சேர்த்து குக்கரில் காய்களை வேக வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு ஏலம், பட்டை தாளித்து, நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.
இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வாசனை வரும் வரை கிளறவும்.
பொடியாக நறுக்கிய மல்லி, புதினா சேர்க்கவும்.
மீதி உள்ள மிளகாய்த்தூளை சேர்த்துக்கிளறி வெந்த பருப்பில் சேர்க்கவும்.
உப்பு எலுமிச்சையை விதைகள் நீக்கி ஸ்பூனால் நன்கு மசித்து தாளிச்சாவில் சேர்த்து மேலும் கொதிக்க விட்டு சூடாக பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

ஸாதிகா மேடம்
நான் உங்கலுடைய தாளிச்சா செய்முறை செய்தென் மட்டன் சேர்த்து இப்பொது தான் முதல் முறை செய்தென் நன்றாக இருந்தது நன்றி

அன்பு ராஜி,
பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.இஸ்லாமிய திருமணங்களில் பிரியாணி இல்லா விட்டால் நெய் சாதத்துடன் மட்டன் சால்னாவும்,இந்த தாளிச்சாவும்தான் சமைப்பார்கள்.
ஸாதிகா

arusuvai is a wonderful website