கூழ் வடகம்

வழங்கியவர் : Seethaalakshmi
தேதி : வியாழன், 05/02/2009 - 17:25
ஆயத்த நேரம் : 30 நிமிடங்கள்
சமைக்கும் நேரம் : 30 நிமிடங்கள்
பரிமாறும் அளவு :
- புழுங்கல் அரிசி(இட்லி அரிசி) - 500 கிராம்
- பச்சை மிளகாய் - 11
- பெருங்காயத் தூள் - 1 ஸ்பூன்
- கல் உப்பு - 2.5 ஸ்பூன்
- புழுங்கல் அரிசியை 2 மணி நேரம் ஊற வைக்கவும். நன்கு களைந்து, பின் கிரைண்டரில் மையாக அரைத்துக் கொள்ளவும்.
- மறு நாள் காலையில், அடிகனமான பாத்திரத்தில் 7 - 8 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
- பச்சை மிளகாய், உப்பு, பெருங்காயத்தூள் மூன்றையும் மிக்ஸியில் மையாக அரைத்துக் கொள்ளவும்.
- இந்தக் கலவையை அரைத்த மாவுடன் சேர்த்து நன்கு கரைத்து வைத்துக் கொள்ளவும்.
- அடுப்பில் தண்ணீர் நன்றாகக் கொதித்ததும், மாவை ஊற்றி, ஒரு மரக் கரண்டியால், கை விடாமல், கட்டி தட்டாமல், நன்கு கிளறவும்.
- தீயைத் தணித்து வைத்து, ஒரு அகலமான தட்டால், கொதிக்கும் வடக மாவை மூடி வைக்கவும்.
- மாவு கெட்டியான பதமாக வரும் வரை, அவ்வப்போது திறந்து, கிளறவும்.
- பிறகு மாடியில், பிளாஸ்டிக் ஷீட்டை விரித்து, முறுக்கு பிழியும் உரலலில், ஒற்றை ஸ்டார் கண் உள்ள தட்டை போட்டு, வடக மாவை அதில் வைத்து, நீளமாகப் பிழியவும்.
- மாலை வரை நன்கு காய விடவும். பிறகு அதை உரித்து எடுக்கவும்.
- மேலும் இரண்டு - மூன்று நாட்களுக்கு வெயிலில் காய வைத்து எடுக்கவும்.
- சுத்தமான டப்பாவில் பத்திரப் படுத்தவும்.
- தேவைப் படும்போது, ரீஃபைண்ட் ஆயிலை, வாணலியில் ஊற்றி, எண்ணெய் காய்ந்த பின்னர், வடகத்தைப் பொரிக்கவும்.
- சாதத்துக்குத் தோட்டுக் கொள்ள சுவையான கூழ் வடகம் தயார்.
Note:
வெயில் காலம் வந்து விட்டது. வடக ஸீசன் தொடங்கி விட்டது. இது புழுங்கல் அரிசியை அரைத்து செய்யும் முறையாகும். வெயில் காலத்தில் செய்து எடுத்து வைத்துக் கொண்டால் ஒரு வருடம் முழுவதற்கும் பாதுகாத்து வைக்கலாம். தேவைப்படும்போது எண்ணெயில் வறுத்து சாதத்துக்குத் தொட்டு கொள்ளலாம். அதிலும் கலந்த சாத வகைகளுக்கு சூப்பர் காம்பினேஷன்.
- கருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.
- அச்சிடுவதற்கு ஏற்ற பக்கம்
உ
நான் பச்சரிசியில் பண்ணிருக்கேன்!
புழுங்கல் அரிசில பண்ணி பாக்கறேன்!
வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...