சீர் குருமா (அல்வா பதம்)

தேதி: February 5, 2009

பரிமாறும் அளவு: 4

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பால் - 6 கப்
சேமியா - 1 கப்
சர்க்கரை - 1 கப்
சர்க்கரை சேர்க்காத கோவா - 1 கப்
பாதாம் பருப்பு - 1/4 கப்
முந்திரி - 1/4 கப்
பிஸ்தா பருப்பு - 1/4 கப்
நெய் - 1/4 கப்
ரெட் கலர் - 1/4 தேக்கரண்டி
ஏலக்காய் - 3


 

முதலில் பாதாம் பருப்பு, முந்திரி மற்றும் பிஸ்தா பருப்பினை சிறிது நேரம் ஊறவைத்து பின் மெல்லியதாக நீளமாக வெட்டி கொள்ளவும்.
6 கப் பாலினை 2 கப் பாலாக மாறும் வரை மிதமான தீயில் கொதிக்கவிடவும்.
2 தேக்கரண்டி நெய்யில் சேமியாவை போட்டி பொன் நிறமாக வறுத்து எடுத்து வைக்கவும்.
அதன்பின் பாதாம் பருப்பு, முந்திரி மற்றும் பிஸ்தா அதில் வறுத்து எடுத்து கொள்ளவும்.
பின்பு பாலில் சேமியா சேர்த்து வேகவிடவும்.
சேமியா பாதி வெந்த்தும் சர்க்கரை, ரெட் கலர் (சிறிது பாலுடன் கலந்து ஊற்றவும்) மற்றும் நெய் சேர்க்கவும்.
அடிக்கடி கிளறிவிடவும்.
பாதாம் பருப்பு, முந்திரி , பிஸ்தா மற்றும் கோவாவை சேர்த்து 3 - 4 நிமிடம் நன்றாக கிளறிவிடவும்.
கடைசியில் ஏலக்காயினை தட்டி போடவும்.
இப்பொழுது சுவையான சீர் குருமா ரெடி.


முஸ்லிம் இல்லங்களில் தங்களுடைய பண்டிகை நாட்களில் செய்யப்படும் இனிப்பு வகை.
இதற்கு நூல் போன்ற சேமியா சேர்த்து செய்தால் மிகவும் நன்றாக இருக்கும். பக்ரீத், ரம்ஜான் போன்ற சமயத்தில் அந்த சேமியா சில கடைகளில் கிடைக்கும்.

மேலும் சில குறிப்புகள்