கோஸ் பாசிப்பருப்பு பொரியல்

தேதி: February 5, 2009

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

முட்டை கோஸ் - 200 கிராம்
பாசிப்பருப்பு - 50 கிராம்
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
நெய் - 1 டீஸ்பூன்
கடுகு, உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
வெங்காயம் - 1
மிளகாய் வற்றல் - 2
பச்சை மிளகாய் - 2
மல்லி இலை, கறிவேப்பிலை - சிறிது
தேங்காய் துருவல் - 3 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவைக்கு


 

பாசிப்பருப்பை ஊறவைத்து அது மூழ்கும் அளவு தண்ணீர் வைத்து ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து முக்கால் வேக்காடு வெந்து எடுக்கவும், உதிரியாக இருக்கும்.
வெங்காயம், கோஸை மெலிதாக கட் செய்து கொள்ளவும். மல்லி, மிளகாயை கட் செய்யவும்.
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு, உளுத்தம்பருப்பு, மிளகாய்வற்றல், பச்சைமிளகாய், கறிவேப்பிலை, வெங்காயம் தாளிக்கவும். பின்பு கோஸ் சேர்த்து வதக்கவும், வதங்கியவுடன் உதிரியாக வெந்த பாசிப்பருப்பு சேர்த்து பிரட்டவும். உப்பு, தேங்காய் துருவல் சேர்த்து மல்லி இலை தூவி இறக்கவும்.
சுவையான கோஸ் பாசிப்பருப்பு பொரியல் ரெடி. கோஸ் சாப்பிடாதவர்கள் கூட இப்படி செய்தால் சாப்பிடுவார்கள்.


மேலும் சில குறிப்புகள்


Comments

ஹாய் ஆசியா அக்கா அஸ்ஸலாமு அழைக்கும் நல்லா இருக்கீங்களா உங்க கோஸ் பாசிப்பருப்பு பொரியல் செய்தேன் ரொம்ப அருமையா இருந்தது என் கணவருக்கு ரொம்ப பிடித்து இருக்கு மிக்க நன்றி

இன்று உங்களுடைய இந்த பொறியல் தான் செய்தேன்.. மிகவும் சுவையாக இருந்தது. நன்றி!

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

அன்பு ஆஸியா,

கோஸ் பாசிப் பருப்பு பொரியல் செய்தோம், நன்றாக இருந்தது, நன்றி

அன்புடன்

சீதாலஷ்மி

அன்புடன்

சீதாலஷ்மி

நீங்க கூட என் சமையல் செய்தீங்களா?மகிழ்ச்சியாக ,பெருமையாக இருக்கு.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ஹாய் ஆசியாக்கா,
கோஸ் பாசிப்பருப்பு பொரியல் இன்று செய்தேன். நானும் இதை போலத்தான் செய்வேன் அனால் இஞ்சி,தக்காளி சேர்பேன். இது ரொம்ப நல்ல இருந்தது.

என்றும் அன்புடன்,
மைதிலி.

Mb

இஞ்சி,தக்காளி நானும் சேர்த்து பார்க்கிறேன்.மகிழ்ச்சி.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

இன்று இந்த பொறியல் செய்தேன். சுவை சூப்பர். நம்மூர் சரவணபவனில் சாப்பிட்டேன் இந்த பொறியல். அதே சுவை.

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!