உப்பு எலுமிச்சை

தேதி: February 5, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

எலுமிச்சைப் பழம் - 25
கல் உப்பு - 2 கப்
பச்சைமிளகாய் - 25


 

பெரிய அளவில், அதிகம் சாறு உள்ள எலுமிச்சைப்பழமாக தேர்ந்தெடுக்கவும்.
கழுவி ஈரம் போக உலர்த்திக் கொள்ளவும்.
பச்சைமிளகாயை காம்பை நீக்கி அலம்பி, உலர்த்திக்கொள்ளவும்.
எலுமிச்சைப்பழத்தை இரண்டாக வெட்டவும். ஆனால் கடைசி வரை வெட்டாமல் முக்கால் பாகம் நறுக்கவும்.
இப்போது நான்கு பாகங்களாக பிரிந்து இருக்கும்.
கைகளால் பிரித்து விட்டு உப்பை நிறைய திணிக்கவும்.
ஒரு செராமிக் ஜாடியில் உப்பு திணித்த எலுமிச்சைப் பழத்தையும், பச்சை மிளகாயையும் சேர்த்து வெயிலில் வைக்கவும்.
தினமும் இரு முறை நன்கு குலுக்கி விடவும்.
10 நாட்கள் வைத்திருந்து, பிறகு எடுத்து ஸ்டோர் பண்ணவும்.
1 வருடத்திற்கும் மேல் ஆனாலும் கெடாது.


மேலும் சில குறிப்புகள்