ஈஸி சிக்கன் ரோல்

தேதி: February 6, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சிக்கன் (எலும்பு இல்லாதது) - 250 கிராம்
இஞ்சி பூண்டு விழுது - 1 மேசைக்கரண்டி
சீரகத் தூள் - 1/2 தேக்கரண்டி
மல்லி தூள் - 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
சாட் மசாலா - 1/4 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி தழை - சிறிது
பச்சை சட்னி - தேவைக்கு
மைதா மாவு - தேவையான அளவு


 

சிக்கன் ரோல் செய்ய தேவையான அனைத்து பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். மைதா மாவுடன் உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி பிசைந்து சப்பாத்தியாக தேய்த்து சுட்டு வைத்துக் கொள்ளவும்.
சிக்கனை சுத்தம் செய்து எடுத்துக் கொண்டு அதில் இஞ்சி பூண்டு விழுது, உப்பு சேர்த்து பிசைந்து ஒரு மணி நேரம் ப்ரிட்ஜில் வைத்திருக்கவும்.
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிக்கனை எடுத்து போட்டு வதக்கவும்.
சிக்கனுடன் தூள் வகைகள் எல்லாவற்றையும் போட்டு பிரட்டி விட்டு நன்கு வேக விடவும்.
சிக்கன் நன்கு வெந்ததும் அதன் மேல் கொத்தமல்லி தழையை தூவி இறக்கி வைக்கவும்.
அதன் பிறகு செய்து வைத்திருக்கும் சப்பாத்தியின் மேல் பச்சை சட்னியை தடவி விடவும்.
அதில் வதக்கி வைத்திருக்கும் சிக்கனை வைத்து சப்பாத்தியை அப்படியே ரோலாக சுருட்டவும்.
இதைப் போலவே பச்சை சட்னிக்கு பதிலாக மயோனீஸ் தடவியும் சுருட்டி வைக்கலாம்.
சுவையான, எளிதில் செய்யக் கூடிய சிக்கன் ரோல் தயார். கூட்டாஞ்சோறு பகுதியின் மூலம் தனது குறிப்புகளை பகிர்ந்துக் கொண்டுள்ள <b> வனிதா வில்வாரணிமுருகன் </b> அவர்கள் அறுசுவை நேயர்களுக்காக வழங்கியுள்ள குறிப்பு இது.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ஹாய் வனிதா,
படம் பார்க்க நா ஊறுகிறது. ;-)
இமா

‍- இமா க்றிஸ்

ஹாய் வனிதா
ரொம்ப நல்லா இருக்கு. நான் நாளைக்கு செய்து பார்கிறேன்
என்றும் அன்புடன்
மைதிலிபாபு

Mb

ரொம்ப ஈஸியா இருக்கு. கண்டிப்பா செய்து பார்ப்பேன். பார்க்கும் போதே சுவைக்க தோணுது. மயோனிஸ் பேட் அதனால் க்ரீன் சட்னி செய்து செய்துபார்க்கிறேன்

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

ஆஹா... என்னுடைய குறிப்பு வந்திருக்கா இன்னைக்கு?! நான் இப்போ தான் வற்றேன் அறுசுவைக்கு. மிக்க நன்றி அட்மின். நன்றி தோழிகளே... சமைத்து பார்த்து பின்னுட்டம் தாருங்கள். :) உங்கள் பதிவுகள் காண ஆசையாக இருக்கேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நானும் இதேபோல் செய்வதுண்டு எப்பவாவது, மட்டின் உறைப்புக்கறிபோல் செய்து வைப்பேன். நல்ல குறிப்பு. ஈசியான முறையில் செய்திருக்கிறீங்கள்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

ஆம் அதிரா ரொம்ப சுலபமா செய்யலாம். நான் இங்கு ஆடு வாங்குவதில்லை, அதான் எப்போதும் அதிகமாக கோழி. இதில் முட்டை கூட செய்து வைக்கலாம். ஏறகுறைய முட்டை பஃப் போல இருக்கும். முயர்சித்து பாருங்கள். :) பார்த்து பதிவு போட்டமைக்கு மிக்க நன்றி அதிரா. சந்தோஷமா இருக்கு.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா