உருளைக்கிழங்கு பாஜி

தேதி: April 3, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

உருளைக்கிழங்கு - கால் கிலோ
பெரிய வெங்காயம் - 1
பச்சைமிளகாய் - 2
மஞ்சள்பொடி - ஒரு சிட்டிகை
தக்காளி - 4
வெண்ணெய் - 3 தேக்கரண்டி
கடுகு - கால் தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - 2 தேக்கரண்டி


 

உருளைக்கிழங்கினைத் தோலுரித்து நான்கு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
வெங்காயத்தைப் பொடி செய்து கொள்ளவும். பச்சைமிளகாயை நீளவாக்கில் இரண்டாக வெட்டிக் கொள்ளவும். தக்காளியை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
அடுப்பில் ஒரு வாணலியை வைத்து சூடாக்கி வெண்ணெய்யை போட்டு உருக்கிக் கொள்ளவும்.
அதில் நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய் மற்றும் உருளைக்கிழங்கினைப் போட்டு வதக்கவும்.
ஒரு சிட்டிகை மஞ்சள்தூளையும் சேர்த்து இரண்டு மூன்று நிமிடங்களுக்கு வதக்கவும்.
பிறகு நறுக்கி வைத்துள்ள தக்காளி மற்றும் உப்பு போடவும். காய்கள் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.
உருளைக்கிழங்கு நன்கு வெந்து மிருதுவாகி, குழம்பு கெட்டியானதும் இறக்கிவிடவும்.
வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி சூடாக பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்