கீரை வடை

தேதி: February 6, 2009

பரிமாறும் அளவு: 5 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

புதினா -- 1/4 கப் (பொடியாக நறுக்கியது)
கொத்தமல்லி தழை -- 1/4 கப் (பொடியாக நறுக்கியது)
வெந்தயக்கீரை -- 1/2 கப் (பொடியாக நறுக்கியது)
தண்டு கீரை -- 1/2 கப் (பொடிதாக நறுக்கியது)
கறிவேப்பிலை -- 2 இனுக்கு (பொடிதாக நறுக்கியது)
பெருங்காயத்தூள் -- 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் -- 2 என்னம் (காரத்திற்கு தகுந்தவாறு )
சீரகம் -- 1 டீஸ்பூன்
சோடா மாவு -- 2 சிட்டிகை
பச்சரிசி மாவு -- 1 ஸ்பூன்
சின்ன வெங்காயம் -- 1 கப் (பொடிதாக நறுக்கியது)
கடலை பருப்பு -- 1/4 கப்
துவரம் பருப்பு -- 1/4 கப்
உளுத்தம் பருப்பு -- 1 ஸ்பூன்
பட்டாணி பருப்பு -- 1/2 கப்
பாசி பருப்பு -- 1 ஸ்பூன்
உப்பு -- தே.அ
எண்ணைய் -- வடை சுடுமளவு


 

எல்லா கீரைகளையும் சுத்தம் செய்து நறுக்கிக்கொள்ளவும்.
எல்லா பருப்புகளையும் களைந்து 2 மணிநேரம் ஊறவைக்கவும்.
பின் பருப்புகளை மிக்ஸியில் போட்டு அரைக்கவும். (தண்ணீர் அதிகம் ஊற்றவேண்டாம்)
அரைத்த கலவையில் மற்ற எல்லா பொருட்களையும் போட்டு நன்கு பிசைந்து கொள்ளவும்.
சூடான எண்ணையை மாவில் ஊற்றி மீண்டும் பிசையவும். இதனால் வடை நன்கு வரும்.
பின் விருப்பமான வடிவில் வடையாக போட்டு சுட்டு எடுக்கவும்.
சுவையான சத்தான கீரை வடை தயார்.


புதினா, கொத்தமல்லி தழை தவிர, கிடைக்கும் கீரைகளை பயன்படுத்தலாம்.

மேலும் சில குறிப்புகள்